குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப்கேப்டன் வருண் சிங்கிற்கு சவுர்ய சக்ரா விருது
டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப்கேப்டன் வருண் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் 3-வது உயரிய விருதான சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கிய விருதை வருண் சிங்கின் மனைவி தாயார் பெற்றுக்கொண்டனர். வானில் பறந்தபோது கோளாறு ஏற்பட்ட தேஜஸ் போர் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.