பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தின் மீது மோதி விபத்து.!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த காவலரின் தாய் உயிரிழந்தார். ஏரியூரைச் சேர்ந்த விஜயகுமார், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி, தாய் மற்றும் குழந்தைகளுடன் இன்னோவா காரில் ஏரியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில், காலை 6.30 மணியளவில் ஆதனூர் அருகே வந்த போது விபத்து நேர்ந்தது. இதில் படுகாயமடைந்த காவலரின் தாய் … Read more

மதுரை கோடை மழை | ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்

மதுரை: மதுரையில் பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தும், அங்கிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட அருகில் உள்ள மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரவில்லை. மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள பழமையான கூடலழகர் பெருமாள் கோயில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை பெற்றுள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு காலையும், மாலையும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அலைமோதும். கூடலழகரை … Read more

“100% பயனாளிகளுக்கு 100% பலன்” – விவசாயிகளுக்கு தவணை நிதி ரூ.21,000 கோடியை விடுவித்த பிரதமர் மோடி உறுதி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “100% பலன் 100% பயனாளிகளுக்கு சென்றடைய நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும்” என்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் … Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் : நீடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்து விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  மழைவீழ்ச்சி இதற்கமைய, மேல்,சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் … Read more

மோசமான வானிலை காரணமாக வந்த வழியிலேயே திரும்பிய விமானம்… 12 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் விரக்தி!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 12 மணி நேரத்தில் ஜப்பான் சென்றடைய வேண்டிய விமானம், 12 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் அமெரிக்காவிலேயே தரை இறங்கியதால் பயணிகள் விரக்தி அடைந்தனர். டாலஸ் நகரில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ நோக்கி சுமார் 7 மணி நேரம் பயணித்த அந்த விமானம், ரஷ்ய கடற்கரை அருகே ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் தொடர்ந்து செல்ல முடியாமல் வந்த வழியிலேயே திரும்பி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரை இறங்கியது. டலாஸ் நகரில் … Read more

`அழகுக்காக அவர்களைப்போல சர்ஜரி செய்ய விருப்பமில்லை!' – ராதிகா ஆப்தே

வயதாவதால் அழகு குறைவதை சமாளிக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷன்களை செய்துகொள்பவர்கள் தன்னை சோர்வாக உணரவைக்கிறார்கள் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பிரபல இந்திய நடிகையான ராதிகா ஆப்தே இந்தி, தமிழ், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் தயாராகி வரும் ’விக்ரம் வேதா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராதிகா, ஒரு செய்தி நிறுவன செய்தியாளரிடம் பேசியபோது, ‘`வயது ஆக ஆக என் தொழில்துறையில் உள்ள பல பிரபலங்களும் அழகுக்காக … Read more

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

தாய்லந்தில் பாலியல் தொழிலாளியை கொன்ற வழக்கில் பிரித்தானியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு பெண் ஒருவரைக் கொன்று, துண்டாக்கப்பட்ட அவரது உடலை ஒரு சூட்கேஸில் ஆற்றில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது. 27 வயதான பாலியல் தொழிலாளியான லக்ஷமி மனோசத்தை (Laxami Manochat) ஹோட்டல் அறையில் கொன்று அவரது உடலை அப்புறப்படுத்தியதற்காக 51 வயதான ஷேன் கென்னத் … Read more

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!

சென்னை: கேரளாவை மிரட்டி வரும் கொசுக்கள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனை களுக்கும் பொது சுகாதாரத்துறை அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும், வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு குறித்த கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,  “க்யூலெக்ஸ் எனப்படும் ஒரு வகை … Read more

குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு

குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் … Read more

இந்தியா கேட்டில் 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸ் சிலை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள … Read more