அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கான சீட் கொடுக்காததால் 2 ஒன்றிய அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல்?.. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முடிவால் விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

டெல்லி: பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இல்லை. அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பியும், ஒன்றிய அமைச்சருமான ஆர்பி சிங்கிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் அரியானா ஆகிய … Read more

சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி

(கோப்பு புகைப்படம்) தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டை தங்கசாலைப் பகுதியை சேர்ந்தவர் ஜீத்மல் (74). இவர் சவுகார்ப்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் கடையில் அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து வெறும் … Read more

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை – எதிர்பார்ப்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்றும், வடகிழக்குப் பகுதிகளில் குறைவாகவும் … Read more

பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ரூ.22.5 கோடிக்கு ஏலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, 22.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2019 முதல் 2021 வரை பல்வேறு தரப்பினர் வழங்கிய பரிசுப் பொருட்கள் டில்லியில் தேசிய நவீன கலைக்கூடத்தில் இன்று(மே 31) மூன்று கட்டங்களாக ஏலம் விடப்பட்டன. முதற்கட்டத்தில் 240, இரண்டாவதாக 612, மூன்றாவதாக 391 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் 22.5 கோடி ரூபாய் கிடைத்தது. … Read more

தி வாரியர் படப்பிடிப்பு நிறைவு: ஜூலை 14ம் தேதி ரிலீஸ்

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு, தமிழில் இயக்கும் படம் தி வாரியர். இதில் ராம் பொத்தனேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி உள்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புல்லட் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், படம் வருகிற ஜூலை 14ம் தேதி வெளிவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகராக ராம் பொத்தனேனி இதில் போலீஸ் அதிகாரியாகவும், ஆதி கேங்ஸ்டராகவும் நடிக்கிறார்கள். ராம் பொத்தனேனி தமிழில் அறிமுகமாகும் முதல் … Read more

எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு வழி இல்லை- விழிபிதுங்கும் ரஷ்யா!| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு எந்த நாடும் தயாராக இல்லை என ரஷ்யா உணர்ந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். முன்னதாக வயிற்று புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தற்காலிகமாக பதவியில் இருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் பதவி ஏற்றுள்ளார். உக்ரைன்-ரஷ்ய போர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. … Read more

10 நிமிசம் லேட்டு, இந்திய பெண்-ஐ வேலையை விட்டு துரத்திய உபர்..! இப்போ புதிய சட்டமே வருகிறது..!

உலகளவில் ஆன்லைன் சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் கிக் எகானமி அதாவது ஆன்லைன் டெலிவரி சேவை, ப்ரீலேன்சர் போன்ற பணிகளைச் செய்யும் ஊழியர்கள், இத்தகையை வேலைவாய்ப்பைக் கொடுக்கும் நிறுவனங்கள் என அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் ஒருவர் தொடுத்துள்ள வழக்குத் தற்போது சட்டமாக மாறும் அளவிற்குப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை செய்பவரா நீங்க.. கண்டிப்பா இதை … Read more

மின்சக்தி அமைச்சர் – இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு இடையில் கலந்துரையாடல்

மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton ஆகியோருக்கு இடையே கடந்த 30 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது இலங்கை எரிசக்தி துறையில் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அவசர மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு நியூசிலாந்து எவ்வாறு … Read more

குரங்கு அம்மை; விமான பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

Health department order to vigil international passenger on monkey box prevention: குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு மனிதருக்கு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, … Read more