#தமிழகம் || காதலிக்க மறுத்த சிறுமியை 10 முறை கத்தியால் குத்திய நாடக காதலன் தப்பி ஓட்டம்.! வெளியான பரபரப்பு தகவல்.!

திருச்சி, மணப்பாறை அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த, மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி கீழ்கண்ட செய்தி சொல்லப்படுகிறது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து … Read more

பஞ்சாப் பாடகரை கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திகார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கருப்புரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான் கானை … Read more

கோமாவில் நித்தி மாமா.. ரஞ்சிதா சொல்வது என்ன..? சமாதின்னா ஆரோக்கியமாம்..!

பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும்  நித்தியானந்தா இறந்து விட்டதாகவும், சமாதியில் இருப்பதாகவும் கோமாவில் இருப்பதாகவும் வேறு வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நித்தியின் பெயரில்  நித்தி பெயரில் மீண்டும் ஒரு அறிக்கை  முக நூலில் வெளியாகி உள்ளது. பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றும் ராஜமாதாவாக ரஞ்சிதா மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… ஒரு காலத்தில் நான் தான் கடவுள் என வித விதமான கெட்டபுகளில் கிராபிக்ஸ் உதவியுடன் … Read more

வழக்குப் பதிவு செய்யாத எஸ்ஐ-க்கு மனித உரிமை ஆணையம் விதித்த அபராதத்துக்கு ஐகோர்ட் தடை

மதுரை: வழக்குப் பதிவு செய்யாததற்காக சார்பு ஆய்வாளருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கரூர் டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜி.நாகராஜன். இவர் வாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மாதவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் புகாரில் உண்மை இல்லை என்று கூறி முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாதவன் மாநில மனித … Read more

தீவிரவாதிகளால் பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை: ஜம்மு – காஷ்மீரில் பண்டிட்கள் போராட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து, காஷ்மீர் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் ரஜினி பாலா. இவர் கோபால்போராவிலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ரஜினி பாலா பள்ளியில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த தீவிரவாதிகள், அந்த … Read more

காதலனைக் கரம்பிடிக்க வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு நீந்தி வந்த பெண்

கொல்கத்தா: இந்தியாவில் உள்ள தனது காதலனை திருமணம் செய்வதற்காக, வங்கதேசத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் நதியில் நீதி எல்லை தாண்டி வந்துள்ளார். காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வதுண்டு. காதலுக்கு எல்லைகளும் இல்லை என நிரூபித்திருக்கிறார் வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தலுக்கும் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரும் திருமணம் செய்ய முடிவு … Read more

மரியுபோல் துறைமுகத்தில் போக்குவரத்தை தொடங்கியது ரஷ்யா..

ரஷ்ய கட்டுப்பாட்டில் வந்துள்ள மரியுபோல் நகரில் முதல் முறையாக சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 2,400 பேர் சரணடைந்ததும் அந்நகரம் ரஷ்ய படைகளின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. துறைமுகத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதி அளித்தது. இதையடுத்து, மரியுபோலில் இருந்து 2,500 டன் உருக்கு ரஷ்யாவின் ரோஸ்டவ்-அன்-டான் (Rostov-on-Don) துறைமுகத்துக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தங்கள் நாட்டு வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக உக்ரைன் … Read more

தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென்மலா பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று திரும்பிய தனியார் பேருந்து ஒன்று மடதர பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, குறுகலான சாலையில் வேகமாக வளைந்ததாக கூறப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், கண்காணிப்பு கேமரா … Read more

இலங்கை மக்களின் விருப்பமான உணவான பாற்சோறு! எப்படி செய்யலாம்?

இலங்கையில் தமிழ்கள், சிங்களவர் விரும்பி உண்ணும் உணவுகளில் பால் சோறும் ஒன்றாகும்.  இதனை பண்டிகை காலங்களில் விஷேசமாக செய்து சாப்பிடுவார்கள்.  அந்தகையில் இன்று பாற்சோறு செய்வது எப்படி என்று இங்கே பார்த்து தெரிந்து கொள்வோம்.   தேவையான பொருட்கள் அரிசி – 2 கப் தேங்காய் – அரை மூடி உப்பு செய்முறை தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து சூடேறியவுடன் தேங்காய்ப் பால் … Read more

சென்னையில் உரிமம் புதுப்பிக்கப்படாத 35ஆயிரம் கடைகளுக்கு சீல்! மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான கடைகள், வர்த்தக, வணிக நிறுவனர்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் மாநகராட்சியிடம் உரிமம் புதுப்பிக்க வேண்டும். இ ஒவ்வொரு தெருவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளின் வகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் கடைகளுக்கான உரிமம் தொகை ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாயில் இருந்து 12 … Read more