கஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல… தீவிரம் காட்ட வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் அறிவுறுத்தல்.!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள … Read more

ஆன்லைன் ரம்மியில் ரூ.35 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞர் – சென்னையில் சோகம்!

சென்னை போரூரில் உள்ள விக்னேஸ்வரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்திருக்கிறார். கொரோனா பேரிடர் சமயத்தில் பணியை இழந்த பிரபு, அதற்குப் பின்பு பணிக்கு எதுவும் செல்லாது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவருக்கும், இவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி இந்த நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனனி வெளியே சென்றுவிட்டு, மீண்டும் … Read more

சேலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் எஸ்ஐ மகன் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்

சேலம் குமரகிரி பை-பாஸ் சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மகன் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிதாசன். ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அருண் (26). இவர் நேற்று முன்தினம் (29-ம் தேதி) சென்னையில் இருந்து ஊட்டிக்கு தனது நண்பர்களான ஜேம்ஸ் அல்பர்ட் (32), ஆனந்த  (32), … Read more

இந்தியாவில் சற்று குறைந்தது கரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது. … Read more

எங்கள் வேலை என்னாகும்?- பாரக் அகர்வாலை சரமாரி கேள்வி கேட்ட ட்விட்டர் ஊழியர்கள்

வாஷிங்டன்: ட்விட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் நடத்தியக் கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஊழியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்து இருந்தார். ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் … Read more

ரஷ்ட படைகளால் உருக்குலைந்து கிடக்கும் மரியுபோல் நகரத்தின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியீடு.!

ரஷ்ட படைகளின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் உருக்கிலைந்து இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மாக்ஸார் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் சேகரித்த இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள், பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் சேதமடைந்த கட்டிடங்களுக்கு இடையே மக்கள் திரண்டிருப்பதையும் காட்டுகின்றன. மரியுபோல் நகர் மீது தொடர் தாக்குதலை நடத்திய ரஷ்யா, கடந்த வாரம் அந்நகரை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. அங்குள்ள அசோவ்ஸ்டல் எஃகு தொழிற்சாலையையும் ரஷ்ய … Read more

வணிக வளாகம் ஒன்றுக்குள் முரட்டுத்தனமாக நுழைந்த எருமை சிலரை முட்டித்தள்ளிய சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் திருச்சூரில் வணிக வளாகம் ஒன்றுக்குள் முரட்டுத்தனமாக நுழைந்த எருமை மாடு ஒன்று அங்கிருந்தவர்களை ஆக்ரோஷமாக துரத்திச்சென்று 3 பேரை முட்டித்தள்ளியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன. சாலையில் மிரண்டு ஓடிக்கொண்டிருந்த எருமை மாடு ஒன்று வழியில் சாலையோரமிருந்த வணிக வளாகத்திற்குள் புகுந்தது. ஆரம்பத்திலேயே ஒருவரை முட்டித்தள்ளி உள்ளே நுழைந்த அந்த எருமை பின்னர் வணிக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நபர்களை துரத்திச்சென்றது. 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன் 3 … Read more

மறைந்த நடிகர் விவேக் மனைவி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வைத்த கோரிக்கை நிறைவேற்றம்!

மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி உயிரிழந்தார். சமீபத்தில் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் விவேக் வசித்த பகுதிக்கு … Read more

அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி.

சென்னை: அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

திருவான்மியூரில் 2 வாலிபர்கள் கொலை- கொலையாளி போலீசில் சரண்

திருவான்மியூர்: சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று குமாரின் தாய்க்கு 16ம் நாள் காரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த விருந்தில் இதில் குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (27), அருண்குமார் (22) ஆகியோர் காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பட்டதாரி வாலிபர்களான இவர்கள் இருவரும் காரிய … Read more