கூடங்குளத்தில் 3-வது அணுஉலைக்கான அழுத்தக்கலன் வெற்றிகரமாக நிறுவப்பட்டது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ரூ.39,747 கோடி மதிப்பீட்டில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2017 ஜூனில் தொடங்கின. தற்போதுவரை 65 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2023 மார்ச்சில் கட்டுமானப் பணிகளை முடித்து, மின்உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், … Read more

யெஸ் வங்கி – டிஹெச்எப்எல் பண மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை

மும்பை: யெஸ் வங்கி – டிஹெச்எப்எல் பண மோசடி வழக்கு தொடர் பாக மும்பை மற்றும் புனேயில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர்கள் அஸ்வினி போன்சலே, ஷாஹித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகிய மூவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இவர்களின் நிறுவனம் வழியாக, யெஸ் வங்கி – டிஹெச்எப்எல்நிறுவனத்தின் பணம் முறைகேடாகபரிவர்த்தனை செய்யப்பட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையை சிபிஐமேற்கொண்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. … Read more

இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் … Read more

உக்ரைனின் லிவிவ் நகருக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி திடீர் வருகை

பிரபல அமெரிக்க நடிகையும், ஐ.நா. அகதிகளுக்கான முகமையின் தூதருமான ஏஞ்சலினா ஜோலி திடீர் பயணமாக உக்ரைன் சென்றார். லிவிவ் நகர வீதிகளில் ரஷ்யப் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட ஏஞ்சலினா போரால் வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். வெடிகுண்டு தாக்குதல்களில் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனை சென்று பார்த்த ஏஞ்சலினா ஜோலி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். லிவிவ் நகரில் உள்ள ஒரு சிற்றூண்டி கடையில் தன்னார்வலர்களுடன் ஏஞ்சலினா கலந்துரையாடியது, குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் வழங்கியது உள்ளிட்ட வீடியோக்கள் … Read more

சத்தீஸ்கரில் வீட்டில் திருட முயன்ற இளைஞரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுத் தாக்குதல்.!

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் வீட்டில் திருட முயன்ற இளைஞரைக் கயிற்றால் மரத்தில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு 5 பேர் சேர்ந்து தாக்கிய வீடியோ வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் நாளில் திருட வந்த இளைஞனைப் பிடித்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அவர்கள் விடுவித்த பின் மறுநாளும் திருட வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனக் கருதிக் காலில் கயிற்றால் கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப் … Read more

FSB தலைவரின் கீழ் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கும் புடின்: ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு தகவல்!

ரஷ்ய ஜனாதிபதி புடின் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது அவரது ஆட்சி அதிகாரத்தை முன்னாள் FSB தலைவரான நிகோலாய் பட்ருஷேவ் கீழ் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாடிபதி புடினின் உடல்நிலை மிகவும் நழிவடைந்து இருப்பதை அவரின் சமீபத்திய வெளிதோற்றங்கள் அம்பலபடுத்தியுள்ளன. இந்தநிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் வயிற்றுப் புற்றுநோய், பார்கின்சன் மற்றும் ‘ஸ்கிசோஃப்ரினிக் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், … Read more

கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும்,  இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று தெரிவித்த கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லிம் லீக் தலைவர்பி.கே. பெரோஸ், கேரள காவல்துறை தலைவரிடம் அளித்துள்ள புகாரில், மத கலவரத்தை தூண்டும்பி.சி.ஜார்ஜை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட், … Read more

பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும், 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வ சூர்யா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோஷ்டி மோதல் தொடர்பாக 11-ம் வகுப்பு … Read more

கொரோனா 4வது அலை உருவாக வாய்ப்பே இல்லை- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உறுதி

புதுடெல்லி: உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த அலைகளை உருவாக்கியது. சில நாடுகள் 4வது, 5வது அலைகளை எதிர்கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் 3 அலை கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தியதால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இன்று காலை வரை நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 190 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம், … Read more

மோதலில் மாணவர் உயிரிழப்பு: ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: 3 மாணவர்கள் கைது

நெல்லை: நெல்லை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளக்கால் புதுக்குடி கிராம மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷீபா பாக்கியமேரி, தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவ நேரத்தில் பணியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.எப்ரல் 25ல் நடந்த மோதலில் படுகாயமடைந்த செல்வசூர்யா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவர் கொலை தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.