ஓய்வு பெற்றார் நரவானே ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

புதுடெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று  பொறுப்பேற்றார். ராணுவ தலைமை தளபதியான மனோஜ் முகுந்த் நரவானேவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை தளபதியாக  லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே  பொறுப்பேற்றார். ஜெனரல் மனோஜ் பாண்டேவிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் தலைமை தளபதி எம்.எம். நரவானே ஒப்படைத்தார். முன்னதாக, அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.ஓய்வு பெற்ற நரவானேவும், அவருடைய மனைவி வீணா நரவானேவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், … Read more

கோயில் திருவிழா முன் விரோதம்: மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் அருகே உள்ள TMC காலணி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்குமிடையே ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நடக்கும் திருவிழாவின்போது சிறு சிறு மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கலைஞர் நகரில் நடைபெற்ற திருவிழாவின்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு TMC காலனியைச் சேர்ந்த சிலர், கலைஞர் … Read more

சீனாவில் அடுக்குமாடி வீடு இடிந்தது | Dinamalar

பீஜிங் : சீனாவில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியுள்ள 23 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நம் அண்டை நாடான சீனாவின் ஹூனான் மாகாணம் வாங்செங் மாவட்டம் சங்க்ஷா நகரில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று திடீரென இடிந்து விழுந்தது.இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 23 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு வசித்த 39 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்புப் … Read more

எல்ஐசி ஐபிஓ.. தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்..!

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 4ம் தேதி தொடங்கவுள்ள பங்கு வெளியீடானது, மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கு வெளியீட்டின் விலை 902 – 949 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Comments Get Latest News alerts. Allow Notifications … Read more

போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுங்கள்

உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: மே தின வாழ்த்துச் செய்தி             உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. நமது நாட்டில் … Read more

உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மே தின வரலாறு

இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான … Read more

தேர்தல் காலம் இல்லை; ஆனாலும், அரசியல் கட்சிகளுக்கு ரூ.648 கோடியை அளித்த நன்கொடையாளர்கள்

George Mathew  No polls, no problem for donors: Parties get Rs 648.48 crore of electoral bonds in April: தேர்தல் இல்லாத காலங்களிலும் கூட அரசியல் கட்சிகள் நன்கொடையாளர்களிடமிருந்து தொடர்ந்து நிதியைப் பெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தரவுகளின்படி, இந்த ஏப்ரலில் நன்கொடையாளர்களிடமிருந்து 648.48 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதனையடுத்து, தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2018 முதல் … Read more

திருவாரூர்: மாயமான பெண் சாக்குமூட்டையில் சடலமாக மீட்பு – கொலையாளிகள் மூவர் கைது!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர்-மேலநெம்மேலி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணவேணி. 55 வயதான இவருக்கு, காமராஜ், கனகராஜ் ஆகிய இருமகன்கள். இவர்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருவதால், கிருஷ்ணவேணி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி திடீரென மாயமானது, அந்தப் பகுதி மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இவர், உறவினர்கள் வீட்டிற்கு எங்காவது சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில், இவர் மகன் கனகராஜ் பல்வேறு … Read more

திருப்பத்தூரில், அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை.!

திருப்பத்தூரில், அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் முகிலன், டி.எம்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அது கைகலப்பாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதில் முகிலன் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்து, முகிலனை கத்தியால் சராமாரியாக தாக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. … Read more

ஓசூரில் திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம்: குழந்தையுடன் உயிர் தப்பிய உரிமையாளர்

ஓசூர்:ஓசூரில் திடீரென எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில், குழந்தையுடன் தனியார் நிறுவன ஊழியர் உயிர் தப்பினார். ஓசூர் ஜுஜுவாடி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பொம்மசந்திரா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டரியில் இயங்கும் எெலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இருசக்கர வாகன பேட்டரிக்கு தினமும் சார்ஜ் ஏற்றி அந்த வாகனத்தில் பணிக்கு சென்று … Read more