”வா மோதிப்பார்ப்போம்”-திமுகவினருக்கு சவால் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு

மொரப்பூர் பொதுக்கூட்டத்தில் எதார்த்தமாக இருந்தோம் மேடையில் ஏறி விட்டீர்கள், இப்போது அரூரில் தயாரிப்போடு வந்திருக்கிறோம் வா மோதி பார்ப்போம் என்று திமுகவினருக்கு அறைகூவல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்… சேலம் – சென்னை எட்டு வழிச் சாலையை அதிவிரைவு … Read more

சட்டப்படி தண்டனை: சிங்கப்பூர் அரசு விளக்கம்| Dinamalar

சிங்கப்பூர் : போதைப் பொருள் கடத்தியதால் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்திய வம்சாவளி நபருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் 34 ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சமீபத்தில் அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து 27ம் … Read more

இன்று இடம்பெறவுள்ள அரசியல் கட்சிகளின் பேரணிகளும் கூட்டங்களும்

தொழிலாளர் தினமான இன்று அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரெயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் சேவைச் சங்க தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் … Read more

தலைமை நீதிபதி என்.வி ரமணா கோரிக்கைக்கு செவி சாய்க்காத மத்திய அரசு

சனிக்கிழமையன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்கள் மாநாட்டில், இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்வைத்த இரண்டு முன்மொழிவுகளுக்கு, மத்திய அரசும், பாஜக ஆளும் மாநிலங்களும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர், நீதித்துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தேசிய அளவில் ஒரு சட்டப்பூர்வ அதிகாரம் வேண்டும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை தற்காலிகமாக நியமனம் செய்து, பெஞ்சில் உள்ள பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார். ஆனால், அவர் கோரிக்கைக்கு மாற்றாக நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு … Read more

வார ராசி பலன் 01-05-2022 முதல் 07-05-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி?

வார ராசி பலன் 01-05-2022 முதல் 07-05-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி? #weeklyraasipalan #Vaararasipalan #Astrology மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் Source link

மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணத்தில் பாகுபாடு என புகார்: சிதம்பரத்தில் 10-வது நாளாக மாணவர் போராட்டம்

கடலூர்:பிற அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்கக் கோரி, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று 10-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட பின்பு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. ஆனாலும், அங்கு தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த … Read more

வெறுப்பு அரசியல் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவு கடிதம்

புதுடெல்லி: ‘வெறுப்பு அரசியல்’ நடைபெறுவ தாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் அதிகாரிகள் குழுவினருக்கு, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் உயர் அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு தங்கள்கடிதம் மூலம் மறுப்பு தெரிவித் துள்ளது. முன்னாள் அரசு உயர் அதிகாரி கள் 108 பேர் ஒன்றிணைந்து அரசியலமைப்பு நடத்தை குழு (சிசிஜி) என்ற சங்கத்தை உரு வாக்கினர். இந்த அமைப்பினர் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பினர். அதில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் நடைபெறுவதாகவும், … Read more

பிரதமர் மோடியின் 63ஆவது வெளிநாட்டு பயணம்: நாளை ஐரோப்பா செல்கிறார்!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 62 முறை பல்வேறு உலக நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இறுதியாக 2021ஆம் ஆண்டில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இத்தாலி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், 63ஆவது வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி நாளை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த முறை அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே மாதம் 2ஆம் தேதி (நாளை) முதல் 4ம் தேதி … Read more

கடற்தொழிலாளியின் படகுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய கடற்படையினரின் படகு(photos)

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன. பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே இவ்வாறு சேதமடைந்துள்ளது. படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் … Read more

அமெரிக்காவின் கான்சாஸ், நெப்ராஸ்கா மாகாணங்களை புரட்டிப் போட்ட சூறாவளிக் காற்று

அமெரிக்காவில் கன்சாஸ், நெப்ராஸ்கா மாகாணங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து கட்டிடங்கள் சேதமடைந்தன. Wichita நகருக்கு வெளியே Andover வழியாக விஸ்வரூபம் எடுத்த அந்த சுழற்காற்றில் சிக்கி வாகனங்கள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. பட்லர், செட்விக் உள்ளிட்ட இடங்களில் சூறாவளிக் காற்று சுழன்று அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். Source … Read more