மே தின பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் குறிப்பிட்டுள்ளார். … Read more

கடந்த ஒரு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரிப்பு – மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் மின்சார தட்டுபாடு ஏற்பட்டு, பல மாநிலங்களில் 2 முதல் 8 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் காரணமாகவே, மின்சார பற்றாக்குறை நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கோல் இந்தியாவின் உற்பத்தி ஏப்ரல் 1 … Read more

புதிதாக 3,324 பேருக்கு தொற்று- 4 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 26ந் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்கள் பாதிப்பு உயர்ந்து நேற்று 3,688 ஆக இருந்தது. இந்தநிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து … Read more

இலங்கை நாட்டு மக்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்சே

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரதமரை பதவி விலகும்படி அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:- அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது உழைக்கும் மக்களுக்கு மே தின வாழ்த்துகள். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து வெற்றி பெற வேண்டும். … Read more

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல; வாழ வைக்கும் அரசாகவும் திகழ்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மே தின நினைவு சின்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர்; தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல; வாழ வைக்கும் அரசாகவும் திகழ்கிறோம். ஓராண்டில் தொழிலாளர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு கொரோனா..40 பேர் பலி… 2876 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,324 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,79,188ஆக உயர்ந்தது.* புதிதாக 40 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

செய்தி எதிரொலி: கடற்கரையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றிய அதிகாரிகள்

பட்டினம்பாக்கம் அடையாறு முகத்துவாரத்தில் மருத்துவக் கழிவுகள் ஊசிகள் கொட்டப்பட்ட செய்தி புதிய தலைமுறையில் வெளியான நிலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றினர். பட்டினம்பாக்கம் அடையாறு முகத்துவாரத்தில் இருந்து நொச்சிக்குப்பம் வரையில் உள்ள கடற்கரை பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் கொட்ட படுவதாக புதிய தலைமுறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அடையாறு முகத்துவாரத்தில் இருந்து நொச்சிக்குப்பம் வரையிலுள்ள 2.5 கிலோ மீட்டர் கடற்கரையில் இன்று காலை கள … Read more

வெளுத்து வாங்கும் வெயில் 122 ஆண்டு காணாத வெப்பம்| Dinamalar

புதுடில்லி : இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏப்ரலில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மெகாபத்ரா கூறியதாவது:கடந்த ஏப்ரலில் நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சராசரியாக அதிகபட்ச … Read more

இன்று தொழிலாளர் தினம்

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம், இன்று தொழிலாளர் தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது.அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் … Read more

Happy Birthday Ajith Kumar: உழைப்பால் உயர்ந்த அஜித்… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

 Happy Birthday Ajith Kumar , Ajith Kumar Twitter trending – தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை 60 படங்களில் நடித்துள்ள அஜித்தின் அடுத்த பிளாக்பஸ்டர் AK 61 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் HappyBirthdayAjith, Ak61 போன்ற ஹேஷ்டேக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை மேலும் ஸ்பெஷல் ஆக்கிட, நலத்திட்ட உதவிகள், … Read more