ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் மீண்டும் தீ வைத்த மர்ம நபர்கள்- கிராம மக்கள் அச்சம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று காலை காட்டுத் தீ ஏற்பட்டது. மரங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது. தீயைக் கட்டுக்கொண்டு வரும் பணியில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஒருவழியாக தீ கட்டுக்குள் வந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் மீண்டும் வனப்பகுதியில் தீ வைத்துவிட்டதாக ரேஞ்ச் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து டுடு ரேஞ்ச் அதிகாரி ஆயுஷ் குப்தா கூறியதாவது:- வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி நேற்று … Read more

டிக்கெட் இன்றி பயணம்- வடகிழக்கு ரெயில்வேயில் ரூ.23 கோடி அபராதம் வசூல்

கவுகாத்தி: இந்தியாவில் ரெயில்களில் பயணம் செய்வோர் டிக்கெட் இன்றி பயணம் செய்வது, முறையற்ற டிக்கெட் வைத்திருப்போர் மற்றும் லக்கேஜ்களுக்கு டிக்கெட் எடுக்காமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கு அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் சேர்த்த தண்டனைகள் விதிக்கப்படும். இந்த நிலையில், வடகிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் இருந்து ஓராண்டில் ரூ.23.36 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரையில் 4 லட்சத்து … Read more

சீனாவின் ஷாவ்மி செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி முடக்கம்: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு போலி கணக்குகளில் பணத்தை அனுப்பிய வழக்கில், சீன செல்போன் நிறுவனமான, ‘ஷாவ்மி இந்தியா’வின்  ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறை அதிரடியாக முடக்கி உள்ளது. லடாக் எல்லையில் சீனா வாலாட்டியதில் இருந்தே, இந்தியாவில் உள்ள அந்நாட்டு  தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான ‘ஷாவ்மி’யும் இந்த கண்காணிப்பு வளையத்தில் சிக்கியுள்ளது.  சீனாவின் ‘ஷாவ்மி’ செல்போன் நிறுவனம். உலகம் முழுவதும்  கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் … Read more

நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு 'விவேக்' பெயர் – அரசாணை வெளியீடு

நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு  சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு  சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு  ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி  ஆழ்வார்திருநகரில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் … Read more

புதுச்சேரி: கதவு ஜன்னல்கள் மூலம் தமிழ் வளர்க்கும் ஓய்வு தமிழ் பேராசிரியர்

புதுச்சேரியில் ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் ஒருவர், தனது வீட்டில் உள்ள அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தமிழ் நூல்களின் வரிகளையும், கவிஞர்களின் படங்களையும் செதுக்கி வைத்துள்ளார். புதுச்சேரி காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மையத்தின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறை தலைவர் முனைவர். அவ்வை நிர்மலா. இவர் லாஸ்பேட் பகுதியில் வசித்து வருகிறார், தனது வீடு முழுவதும் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளில் தமிழ் நூல்களின் வரிகளை அச்சிட்டு உருவாக்கியுள்ளார். தனது வீட்டின் வாயில் கதவை திருக்குறள், தொல். … Read more

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்| Dinamalar

புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக, ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, முதல் ‘டோஸ்’ தடுப்பூசியையே, ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும் முன்னெச்சரிக்கை டோசாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது நம் நாட்டில் ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ ஆகிய தடுப்பூசிகள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகளை பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. … Read more

வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை| Dinamalar

சியோல் :”வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்” என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரித்துள்ளார்.கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஏவுகணை இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில் ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என கிம் ஜங் … Read more

உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை – பிரதமர்

தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மே தின செய்தி – 2022 மே 01 அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு … Read more

தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க உழைக்கிறேன்: திண்டுக்கல்லில் ஸ்டாலின் பேச்சு

We Work for Tamilnadu development; Stalin speech at Dindigul: மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மாநிலங்களை முடக்க நினைக்கின்றனர் என்றும், தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன் என்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவிப்புகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்து வருகிறேன். அதிலிருந்து யாரும் … Read more

இன்றைய (01.05.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more