12,000 வலி நிவாரண மாத்திரைகள்… 100 ஊசி மருந்துகள் பறிமுதல் – வாகனச் சோதனையில் சிக்கிய நபர்!

சென்னை பெருநகரில் கஞ்சா, போதைப்பொருள்கள், சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்தும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கைது அப்போது அவ்வழியாக வந்த பைக்கை … Read more

சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே சட்ட விரோத கருக்கலைப்பால் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லப்பைக்குடிக்காடைச் சேர்ந்த செவிலியரா ன வேளாங்கண்ணி என்பவர் நேற்று மாலை அத்தியூருக்கு சென்ற நிலையில், அவரது குழந்தைகளை மெடிகல் ஷாப் நடத்தி வரும் இளையராஜா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது உங்கள் அம்மா வயிறு மற்றும் நெஞ்சு வலி காரணமாக தன்னிடம் சிகிச்சை பெற வந்ததாகவும், தற்போது மயங்கி கிடப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து … Read more

இன்று மே தின கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மே தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான சமூகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதை உறுதிசெய்வதற்காக, புதிய சாத்தியமான யோசனைகள், புதுமையானதொழில்நுட்பங்கள், தொலைநோக்குப் பார்வையுடன் அர்ப்பணிப்போடு கடின உழைப்பை நல்கஉறுதி ஏற்போம். இந்தியா தனதுவிடுதலையின் 100-வது ஆண்டைகொண்டாடும் 2047-ம் ஆண்டுக்குள், உலகத் தலைமையாக இந்திய தேசம் வெளிப்படட்டும். முதல்வர் ஸ்டாலின்: தொழிலாளர்கள் தமிழகத்தின், … Read more

ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

புதுடெல்லி: ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே நேற்று ஓய்வு பெற்றார். இதை யடுத்து 29-வது ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் இன்ஜினீயர்ஸ் படை் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். … Read more

திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில்: ரூ.500 கோடியில் நிலம்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். திருப்பதியில் மட்டுமல்லாமல் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு சொந்தமாக பல்வேறு மாநிலங்களில் வெங்கடாஜலபதிக்கு கோயில் உள்ளது. சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு சொந்தமான கோயில் தி.நகரில் உள்ளது. அதேபோல், சென்னை, உடுமலைப்பேட்டை, மதுரை, புதுவையில் தேவஸ்தானம் சார்பில் கோயில்கள் கட்டப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கோயில் கட்டுவதற்காக ரூ.500 கோடி … Read more

அலரி மாளிகைக்கு முன்னால் இருந்து தமிழர்களுக்கு வந்த அழைப்பு! களத்தில் ஒற்றைத் தமிழன்(Video)

அரசியல் என்னும் சாக்கடையே எனக்கு வேண்டாம், ஒட்டு மொத்த மக்களுக்காகவும் தான் நான் போராட வந்திருக்கின்றேன் என அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் பார்வையாளராக இருந்த இந்த தமிழ் முதியவர்  தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அலரி மாளிகை போராட்டக் களத்தில் இருக்கும் ஒரு தமிழர் இவர் என அப்பகுதியில் இருக்கும் எமது … Read more

சீனாவில் பயங்கரம் : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், 39 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமானதாகவும், மேலும் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் … Read more

நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து – ரயில் சேவைகள் பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியானா நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று காலை 11 மணியளவில், நியூ எக்டில் ரயில் நிலையத்தின் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் நிறுத்தப்பட்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இந்த விபத்தில் … Read more

Ajith : "ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்" – அஜித் குமார் நேர்காணல் (Vikatan Originals)

அஜித் குமார் இந்திய அளவில் கவனிக்கப்படும் திரைக்கலைஞர். அமராவதி படம் தொடங்கி வலிமை வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்து தனக்கென குறிப்பிட்ட இடத்தை தக்க வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை தல என அடைமொழியிட்டு அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அஜித்தின் முடிவுகள் அனைத்தும் திரைத்துறையைத் தாண்டியும் ஆச்சர்யம் ஏற்படுத்துபவை. பல வருடங்களாகவே அஜித் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. 2012-ம் ஆண்டு … Read more

உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து … Read more