காவல் பணியைதான் முடிக்கிறேன்.. மக்கள் பணி தொடரும்.. – தாம்பரம் ஆணையர் ரவி

தாம்பரம் காவல் ஆணையர் டி.ஜி.பி. ரவி இன்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், பணி ஓய்வு பிரிவு உபசார விழாவில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியதாவது:- மக்களின் பணிதான் முக்கியம். மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை. மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். அரசாங்கம் வாய்ப்பு கொடுத்த போதெல்லாம் நான் மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். காவலர்கள் உடல்நிலையை நன்றாக வைத்திருந்தால்தான், மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும். தவறு யார் … Read more

மதுரையில் நடைபெற்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் போராட்டம் வாபஸ்

மதுரை: மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 86,912 கோடி ரூபாயை விடுவித்தது ஒன்றிய அரசு: தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி விடுவிப்பு

டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 86,912 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு கடந்த 26ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவிக்க வலியுறுத்தினார். இந்நிலையில் மாநில … Read more

‘நிலக்கரி கையிருப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது என்றும், அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்றும் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more

21 மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக 21 மாநிலங்களுக்கு ரூபாய் 86,912 விடுவித்தது மத்திய அரசு. 2022 மே 31-ம் தேதி வரை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான 86,912 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூபாய் 9,602 கோடியும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரள மாநிலத்திற்கு 5,693 கோடி ரூபாயும், ஆந்திர மாநிலத்திற்கு 3,199 கோடி ரூபாயும், கர்நாடக மாநிலத்திற்கு 8,633 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு 576 கோடி ரூபாயும் … Read more

பெரியார் பல்கலை தொலைதூர படிப்புகள் செல்லாது| Dinamalar

புதுடில்லி: சேலம் பெரியார் பல்கலை.,யில் போதிய ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர் இல்லாமல் இருப்பதோடு, பல்கலைகழக மானிய குழுவின் அனுமதியை பெறாமல், தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்லைன் கல்வி திட்டங்கள் நடத்தி வருகிறது என்றும், அந்த படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி அறிவித்துள்ளது. புதுடில்லி: சேலம் பெரியார் பல்கலை.,யில் போதிய ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர் இல்லாமல் இருப்பதோடு, பல்கலைகழக மானிய குழுவின் அனுமதியை பெறாமல், தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்லைன் ஊடக தர்மம் … Read more

என்னை நான் மாற்றிக் கொண்டேன்: மனம் திறந்த ஹரி

சாமி 2 படத்திற்கு பிறகு ஹரி இயக்கி இருக்கும் படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஹரி பேசியதாவது: எனது 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களுக்கு தாவி… அதில் வெற்றி கிடைத்ததால் அதிலேய பயணித்து தெலுங்கு படங்கள் … Read more

ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ.. யார் இந்த சமீர்..?

உணவு சேவை நிறுவனமான ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீர் கேதர்பால் என்பவர் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணி புரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூப்லியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பிரதீப் போட்டால் என்பவருக்கு பிறகு சமீபத்தில் சமீர் கேதர்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் … Read more

மலேசியா தொழிற் சந்தையை அடிப்படையாக கொண்டு பயிற்சி நிலையம்

மலேசியாவில் தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட பயிற்சி நிலையம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர்  Tan Yang Thai உடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மலேசியாவில் பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும், அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து பயிற்சி நிலையத்தை விரைவில் … Read more

ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்; உளவாளி அதிர்ச்சித் தகவல்

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது.  புடினின் பார்வை மங்கி வருவதாகவும், அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதாக  ரஷ்ய உளவாளி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் புடினின் கண்பார்வை மங்கி வருவதாகவும், … Read more