அமைச்சர் ஆக மாட்டேன் என உதயநிதி உறுதி கூறுவாரா? சீமான் கேள்வி

Seeman said Udhayanidhi Stalin going to minister soon: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக மாட்டேன் என உறுதியாக சொல்வாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தி.மு.க செயற்குழுவில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இது போன்ற … Read more

கணவனுடன் பழகிய பெண்… கொடூரமாக பழிவாங்கிய மனைவி.. தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை ஆட்களை வைத்து கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கோண்டாபூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் சிவில் சர்வீஸ் தேர்விற்காக தயாராகி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.  இதனால், இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இதனை அறிந்த காயத்திரி இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆயினும் அவரது … Read more

திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள்; வாழ்த்திய கிரிக்கெட் வாரியம்!

கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள். இருவரும் மைதானத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தவர்கள். நெடுநாட்கள் நண்பர்களாகப் பழகி வந்த இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 2019 -ல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். ஆனால் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக இவர்களின் திருமணம் தள்ளிப்போக நேர்ந்தது. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் … Read more

மன்னார்குடி அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வடுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான குளத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, குளத்தின் ஒருகரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றபோது சிறுவர்கள் டேனியல் , மகேந்திரன் ஆகியோர் நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரழந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் … Read more

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெயரில் பணம் பறிப்பு: கல் குவாரி அதிபர்கள் குற்றச்சாட்டு

சேலம்: ”சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் பலர் குவாரி அதிபர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியது: ”திருநெல்வேலி கல்குவாரி … Read more

‘மண் காப்போம்’ இயக்கத்துடன் குஜராத் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: மண்வளத்தை காப்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள “மண் காப்போம்” இயக்கத்துடன் குஜராத் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து ஈஷா அமைப்பு வெளியிட்ட செய்தி: உலகளவில் நிகழ்ந்து வரும் மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் “மண் காப்போம்” இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இதற்காக, மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 100 நாள் பைக் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா, மத்திய கிழக்கு … Read more

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் முக்கிய பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளதென இன்றைய தினம் வெளியான புதிய புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும்  பணவீக்கம் இதேவேளை, மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. மே மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 30.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணம் அச்சிட்டால் பணவீக்கம் மேலும் உயர்வடைந்து பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Source link

படுமோசமான ஆட்டம்.. பணம் லட்சியத்தை மறைத்துவிட்டது! ஐபிஎல் வீரர்களை விளாசிய முன்னாள் வீரர்

ஒரு சீசனில் நன்றாக விளையாடிய வீரர்கள், பணத்தால் லட்சியத்தை மறந்துவிட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 2022 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலரும் பெரிதளவில் சொதப்பினர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் மோசமான ஆட்டம் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்தது. ஆனால், சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மிரட்டலான … Read more

100ஐ நெருங்கியது… தமிழ்நாட்டில் இன்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 46 – சென்னை 44…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 44, செங்கல்பட்டில் 46 திருவள்ளூரில் 2 மற்றும் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவையில் 2 பேருக்கும் வேலூரில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தவிர அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும் கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இன்று மொத்தம் 12,340 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 56 ஆண்கள் 42 பெண்கள் என மொத்தம் 98 … Read more

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு அளிக்கிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றார். அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 2 நாள் ஆய்வு பணி முடிவடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- டெல்டா … Read more