ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது

திருப்பதி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இறுதி ஆட்டத்தின் போது ஆந்திர மாநிலம் சித்தூரில் பந்துக்கு பந்து பணம் கட்டி சூதாட்டம் நடைபெறுவதாக சித்தூர் டி.எஸ்.பி சுதாகர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி இன்ஸ்பெக்டர் எத்தியேந்திரா மற்றும் போலீசார் பால திரிபுரசுந்தரி கோவில் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். … Read more

காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

லிப்ரெவில்லி:  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் வரும் 7-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் காபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா … Read more

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது

கோவை: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசைத்தறியாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நாளை முதல் மீண்டும் ஜவுளி உற்பத்தி தொடங்கப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக காடாத்துணி உற்பத்தி செயற்கை நூலிமைகள் கொண்டு தொடங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்

ராய்காட்: தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் காரவலி கிராமத்தில் கணவருடன் வசித்து வந்த 30 வயதான இளம்பெண்ணுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 18 மாத பச்சிங்குழந்தை உட்பட மற்ற அனைவருமே 10 வயதிற்கு உட்பட்டவர்கள்தான். 6 குழந்தைகளில் 5 குழந்தைகள் பெண் குழந்தைகள். கணவன் – மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மேலும் … Read more

குளத்திற்கு குளிக்கசென்று வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்கள்-கடைசியில் காத்திருந்த சோகம்

மன்னார்குடி அருகே குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் சக்கிலியன் குளம் உள்ளது. இதில் காரக்கோட்டை நடேசன் காலனியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் டேனியல், விஜயகுமார் என்பவரது மகன் மகேந்திரன் (15) ஆகிய இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குளத்தின் ஆழத்துக்கு சென்ற இருவரும், கரைக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், … Read more

திரையரங்குகளில் 50-வது நாளை நெருங்கும் யஷின் ‘கேஜிஎஃப் 2’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் யஷின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எஃப்2 ’ திரைப்படம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே தயாரிப்பில், நடிகர் யஷின் நடிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ‘கே.ஜி.எஃப்.2’. இவர்களின் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் 1’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, ‘‘கே.ஜி.எஃப்.2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கொரோனா காரணமாக … Read more

இறந்த பின் அழாதீர்கள், இருக்கும்போது உதவுங்கள்: எலிசபெத் உருக்கம்

சின்னத்திரை மற்றும் சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் எலிசபெத் சுராஜ். கனா காணும் காலங்கள். அனுபல்லவி, கலாட்டா குடும்பம், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது போதிய வாய்ப்பு இன்றி தவிக்கும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வாய்ப்பு கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது: சினிமாத்துறை , தொலைகாட்சி துறை அன்பர்களுக்கு, எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை வேற்று மாநில நடிகருக்கு … Read more

ஆசிய ஹாக்கி: இந்தியா – தென் கொரியா போட்டி டிரா

ஜகர்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் 4’ சுற்றில், தென் கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4 – 4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. முதல் போட்டியில் ஜப்பானை வென்ற இந்திய அணி, மலேசியாவுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த நிலையில், தென் கொரியாவுடனான போட்டியிலும் டிரா செய்துள்ளது. இதனால், ஜப்பான் – மலேசிய அணிகள் இடையிலான மற்றொரு போட்டியின் முடிவை பொறுத்து, இந்திய அணியின் பைனல் வாய்ப்பு அமையும். ஜகர்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் … Read more

GDP Data LIVE: ரியல் ஜிடிபி அளவு 2021-22 நிதியாண்டில் ரூ.147.36 லட்சம் கோடி..!

பணவீக்கம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் வரையில் இந்தியாவின் பொருளாதாரம் வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. சந்தை கணிப்புகளை தாண்டி மார்ச் காலாண்டின் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாலர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. May 31, 2022 6:28 PM ஜூன் 2022 காலாண்டுக்கான ஜிடிபி அளவீடுகளை ஆகஸ்ட் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜப்பானிய பிரதித் தூதுவருடன் சந்திப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27ஆந் திகதி சந்தித்தார். குறிப்பாக கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஜப்பான் அரசாங்கம் வழங்கிய தாராளமான உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் பொருளாதார சவால்களைத் … Read more