TNSDC Jobs; தமிழக அரசு வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNSDC recruitment 2022 for various jobs apply soon: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 09.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் கல்வியில் மாணவர்களுக்கு உதவுதல், ஊக்கப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் திறமைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளையும், நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இந்த திறன் மேம்பாட்டுக் கழகத்தில், சி.இ.ஓ, திட்ட … Read more

கணவன் மனைவி சண்டையில் தலையிட்ட உறவுகார பெண்.. பழிவாங்க கணவன் செய்த செயல்..!

பெண் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி  ஆபாச படங்களை பகிர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின்  அடையாளத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் கடந்த ஓராண்டாக ஆபாச படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு … Read more

மாணவிகளுக்கான சிறப்பு பேருந்தை வழிமறித்த கல்லூரி இளைஞர்கள்… வைரலான வீடியோ – என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கி வருகிறது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இருபாலர் மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்காக செஞ்சி பணிமனையிலிருந்து சிறப்பு அரசு பேருந்துகள் கல்லூரி நாள்களில் இயக்கப்படுகின்றன. அதில், மாணவிகள், பெண்கள் செல்லும் வகையில் ஒரு அரசுப் பேருந்தும் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் மட்டும், பெரும்பாலும் கல்லூரி மாணவிகளே பயணிப்பார்கள் எனக் … Read more

டாஸ்மாக் பாரில் லாட்டரி டிக்கட் விற்பனை… தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது.!

சென்னை அடுத்த திருவொற்றியூரில் உள்ள டாஸ்மாக் பாரில், லாட்டரி டிக்கட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் பார் உரிமையாளரை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். ஜோஸ்வா என்பவருக்குச் சொந்தமான டாஸ்மாக் பாருக்கு மது அருந்த வருவோரிடம் ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட் விற்று வந்த சுரேந்தர் என்ற பட்டதாரி இளைஞரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பார் உரிமையாளர் ஜோஸ்வாவிற்கு தெரிந்தே லாட்டரி விற்பனை நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக … Read more

“துர்நாற்றத்தில் தூங்கா நகரம்… தூய்மைப் பணியாளர்கள் கோருவதை உடனே செய்க” – இபிஎஸ்

சென்னை: “மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்கடந்த 3 நாட்களாக 28 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தூங்கா நகரான மதுரையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த இந்த திமுக … Read more

தமிழகத்துக்கு ரூ.9602 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு: மே 31-ம் தேதி வரை பாக்கி இல்லாமல் வழங்கியது மத்திய அரசு 

புதுடெல்லி: மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு முழுவதையும் இன்று (மே 31-ம் தேதி) வரை கணக்கிட்டு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு விடுவித்துள்ள தொகையில் தமிழகத்துக்கு ரூ.9602 கோடி கிடைக்கும். புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 2022 மே 31-ந் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு (ரூ.86,912 கோடி) முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாநிலங்கள் இந்த நிதியாண்டின் மூலதனச்செலவு உள்ளிட்ட … Read more

குரங்கு அம்மை நோயும் நிறவெறிச் சாயமும் – கண்டிக்கும் உலக சுகாதார நிறுவனம்

ஐக்கிய நாடுகள்: குரங்கு அம்மை நோய்த் தொற்றை எல்ஜிபிடி சமூகத்தினருடனும், ஆப்பிரிக்க மக்களுடனும் தொடர்புப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் … Read more

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின் 30 போர் விமானங்கள்..

தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளன. அந்நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் இந்த ஆண்டு சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது. நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் உள்ளிட்டவை ஊடுருவலில் பங்கேற்றதாகவும், சீன போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தங்கள் போர் விமானங்களை அனுப்பியதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

இறந்து பிறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்த பெண்! லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பிரித்தானியாவில் ஒரு பெண் இறந்து பிறந்த தனது குழந்தையை டப்பர்வேர் டப்பாவில் அடைத்து வீட்டின் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் லாரா பிராடி என்ற பெண் கருவுற்ற நான்கு மாதத்தில் கருச்சிதைவுக்கு ஆளானார். அவர் தனது காதலன் லாரன்ஸ் வைட்டுடன், தனது கருவை வெளியே எடுப்பதற்காக லூயிஷாமில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனையால் திருப்பி அனுப்பப்பட்ட்டுள்ளார். பின்னர், இருவரும் வீட்டிற்கு சென்று, கழிவறையில் இறந்த குழந்தையை … Read more

700 ஆண்டு வழக்கம் ஒழிந்தது… கேரள கிராமத்தில் உள்ள ஆலயத்திற்குள் அனைவரும் நுழைய அனுமதி…

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது. கண்ணூர் அருகில் உள்ள மடிகை பஞ்சாயத்தில் உள்ள இந்த கோயிலுக்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வெளியாட்கள் யாரையும் இதுவரை அனுமதித்ததில்லை. படங்கள் நன்றி தி இந்து இந்த நிலையில், கோயிலுக்குள் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களையும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிப்பது குறித்து கோயில் நிர்வாகக் … Read more