தென்கொரியா உடனான போட்டி டிரா – ஆசிய கோப்பை இறுதிக்கு இந்தியா தகுதிபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது. இதில், இந்திய அணி 4 – 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது. ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் … Read more

காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே முக்கியமாக இருந்தது – பிரதமர் மோடி தாக்கு

இடா நகர்:  சிம்லாவில் நடந்த மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு வழங்கும் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இதன்படி 10 கோடி விவசாயிகளுக்கு இன்று மொத்தம் 21,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: சிம்லாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிம்லா எனது கர்ம பூமி. பல வீர, தீர தியாகங்களைக் கெண்டது சிம்லா. இங்குள்ள … Read more

மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சென்னை: சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனுவை பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மோசடி வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் குஜராத் மாநில பாஜக தலைவர் முன்னிலையில் பாஜவில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்..!

அகமதாபாத்: நான் பாஜவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் கடந்தவாரம் கூறியிருந்த நிலையில், அவர் வரும் 2ம் தேதி பாஜவில் இணைவதாக கூறப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் கடந்த வாரம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நான் தைரியமாக ராஜினாமா செய்திருக்கிறேன். … Read more

மரத்தில் தலைகீழாக தொங்கி உயிருக்கு போராடிய காகம் – பலமணி நேரம் போராடி மீட்ட இளைஞர்கள்

மரத்தில் தலைகீழாக தொங்கியபடி உயிருக்குப் போராடிய காகம் ஒன்றை இளைஞர்கள் பொறுமையாக மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தக்கலை பகுதியில் அமைந்துள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. நேற்று காகம் ஒன்று இரை தேடியபடி இந்த அரசுப் பள்ளியின் முன் பக்கம் இருக்கும் வேப்பமரத்தில் வந்து அமர்ந்தது. இரை தேடிவந்த அந்த காகம் வேப்பமரத்தில் அமர்ந்தபோது அந்த மரத்தில் பின்னி பிணைந்து கிடந்த நூலில் அதன் கால்கள் … Read more

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்களான பிரயாஸ், அகிசந்த் டெவலப்பர்ஸ், மங்கள்யத்தன் ஆகிய நிறுவனங்களில் அமைச்சர் ஜெயின் மற்றும் அவரது மனைவிக்கு மூன்றில் ஒரு பகுதி பங்குகள் உள்ளதாக கூறியும், போலியான நிறுவனங்கள் மூலம் நிதி மோசடி நடத்தியதாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ சத்தியந்திர ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த … Read more

புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லர்: மாஸ் காட்டும் கமல்ஹாசன்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லரை புர்ஜ் கலிஃபாவில் வெளியிடவுள்ளது படக்குழு. லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். … Read more

மொபைல்போனை திருடர்களிடமிருந்து காக்க ஏற்ற செயலி எது? ஓர் பார்வை| Dinamalar

சென்னை: நீண்டதூர ரயில், பேருந்து பயணங்களின்போது பிக்பாக்கெட் ஆசாமிகளிடம் இருந்து மொபைல்போன், பர்ஸ் ஆகியவற்றை காக்க நம்மில் பலர், உடல் சோர்வாக இருந்தும் பல மணிநேரம் தூங்காமல் இருந்திருப்போம். இன்றைய நவநாகரிக உலகில் மொபைல்போன் இல்லாமல் பயணம் செய்ய முடியாது என்கிற சூழல் உருவாகி உள்ளது. ஆண்கள் மேலாடை பாக்கெட், பேண்ட் பாக்கெட்களின் மொபைல்போன்களை வைத்திருப்பர், பெண்கள் பெரும்பாலும் ஹேண்ட்பேக்குகளில் வைப்பர். மொபைல்போன்களை யார் எங்கே வைத்தாலும் அதனை நாசுக்காக உருவி எடுப்பதில் கைதேர்ந்த திருடர்கள் இருக்கவே … Read more

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

2019ம் ஆண்டு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து குயின் என்ற ஒரு வெப் தொடர் வெளியானது. கௌதம் மேனன்- பிரசாந்த் முருகேசன் ஆகியோர் இணைந்து இந்த தொடரை இயக்க, ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது குயின் வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இணைந்து மீண்டும் இயக்க, ரம்யா கிருஷ்ணனே இந்த தொடரில் மீண்டும் தான் ஏற்கனவே நடித்த … Read more

மாநிலங்களுக்கு மே 31 வரை ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் 2022ஆம் ஆண்டு மே 31 வரை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.86,912 கோடி ஜிஎஸ்டி தொகை விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகையின் மூலம் மாநிலங்கள் தங்கள் வளங்களை நிர்வகிக்கவும் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், மூலதனச் செலவுகள் செய்யவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய, மாநில அரசுக்கும் சமமான உரிமை உண்டு.. ஜிஎஸ்டி வழக்கில் சுட்டிக்காட்டப்பட்ட 246A, 279A..! ஜிஎஸ்டி நிலுவைத் … Read more