சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வு

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று (31) இடம்பெற்றது. புகைப்பொருள் பாவனை அற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காடு வரை விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் … Read more

யூடியூபில் கொட்டும் பணம்: நீங்கள் சம்பாதிப்பது எப்படி?

Earn From YouTube in tamil: யூடியூப் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உருவெடுத்துள்ளது. பில்லியன் கணக்கான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ள இந்த தளம் ஏராளமான படைப்பாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பலரைக் கொண்டுள்ளது. மிகவும் பிரபலமான சேவையாக இருப்பதால், பயனர்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய பல வழிகளை இது வழங்குகிறது. யூடியூப் என்பது லட்சக்கணக்கான சேனல் உரிமையாளர்களின் வீடு. எனவே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்க இதை நம்பியுள்ளனர். பல பிரபலமான யூடியூபர்கள் இப்போது யூடியூப் … Read more

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! 

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்தித்து உள்ளார். இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.  தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சரும், … Read more

டைம் பாஸ்-காக லாட்டரி வாங்கிய தமிழருக்கு ரூ.10 கோடி பரிசு!!

உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் சென்றபோது லாட்டரி வாங்கிய தமிழருக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. விஷூ ஆண்டு பிறப்பை முன்னிட்டு ரூபாய் 10 கோடிக்காக லாட்டரி பரிசுச்சீட்டு விற்பனை நடத்தப்பட்டது. இந்த 10 கோடி பரிசுத்தொகைக்காக 43 லட்சத்து 69 ஆயிரம் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.முதல் பரிசான 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்தது. ஆனால் லாட்டரிச்சீட்டின் எண் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும்  யாரும் … Read more

சிவில் சர்வீஸ் – 7 ஆண்டுகளில் இல்லாத அளவு தமிழர்களின் தேர்ச்சி குறைவு!!

சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.  மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 685 பேரில் 27 பேர் மட்டுமே, தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கின்றனர். 2014ஆம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த தமிழக தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்தது. 2017இல் 4 சதவிகிதமாக இருந்தது. அதாவது எண்ணிக்கையில் அடிப்படையில் 42 பேர். அடுத்த ஆண்டுகளில் சற்று அதிகரித்த தேர்ச்சி எண்ணிக்கை 2020இல் … Read more

முடி வெட்டிவிட்டு வருவதற்குள் 19 சவரன் தங்க நகைகள் கொள்ளை – கொள்ளையர்கள் போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னை பெரம்பூர் பாரதி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (40). இவர் கடந்த 29-ம் தேதி இரவு 8 மணியளவில் கதவை பூட்டி விட்டு வீட்டின் அருகில் உள்ள சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்ய சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் நின்றுக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், சத்தம் போட்டார். உடனடியாக வீட்டிலிருந்த இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை … Read more

திருநெல்வேலி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை.!

நெல்லை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கணவருடன் திருப்பூரில் வசித்து வந்த ராமலட்சுமி, கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து நெல்லை மாவட்டம் தெற்கு வாகைகுளத்தில் உள்ள தந்தை வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு … Read more

“பல பள்ளிகளுக்குத் தெரிவதில்லை” – 3 வயது மகளுக்கு ‘சாதி, மதம் இல்லை’ என சான்று பெற்ற தந்தை பேட்டி

கோவை: கோவை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என சான்று வழங்கப்பட்டுள்ளது. கோவை கே.கே.புதூரைச் சேர்ந்தவர் எஸ்.நரேஷ் கார்த்திக் (33). இவர் தனது மூன்றரை வயது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல பள்ளிகளை நாடினார். விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிடவில்லை என்பதால், பல பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்த 5 … Read more

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 இடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இந்த நிலையில், நாடு முழுவதும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் … Read more

கட்டுநாயக்கவில் தேங்கிக்கிடக்கும் மருந்துகள்: விடுவிக்க உத்தரவு – செய்திகளின் தொகுப்பு

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் … Read more