ஈராக் நாட்டில் மூக்கில் இருந்து ரத்தம் வடியச் செய்யும் காய்ச்சல் பரவல் – மக்கள் அச்சம்

ஈராக் நாட்டில், மூக்கில் இருந்து ரத்தம் வடியச் செய்யும் புதுவித காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல், கிரிமியன் – காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்றழைக்கப்படுகிறது. சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதாகவும், பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கின் வழியாக அதிகளவு ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும், இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் … Read more

ஜூன் மாதத்தில் லட்சுமி தேவியின் அருளால் பேரதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Courtesy: boldsky  2022 ஜூன் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம். மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் விரிவாக்கம் மற்றும் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நண்பர்களிடன் உதவியால் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு இது நல்ல நேரம். மிதுனம் லட்சுமி தேவியின் அருளால் மிதுன … Read more

8ஆண்டு பாஜக ஆட்சியின் அவலம் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது – ஆடியோ

8ஆண்டு பாஜக ஆட்சியின் அவலம் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/05/Pari-Audio-2022-05-31-at-6.09.15-PM.ogg

தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்.. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

ரூ.3,000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஒ) மூலம் உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிப்பது அதிநவீன அஸ்திரா ஏவுகணை. இந்நிலையில், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2,971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க … Read more

திருச்சி அருகே 11-ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் 11-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாக 'center for research on energy and clean air' ஆய்வில் தகவல்

டெல்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் பல நாட்கள் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்தாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘center for research on energy and clean … Read more

திருச்சி: யாசகம் பெற்ற பணத்தில் இலங்கை தமிழர்கள் துயர்நீக்க தானம் வழங்கிய யாசகர்

தனக்காக யாசகம் கேட்பவர்களுக்கு மத்தியில், தான் யாசகமாக பெற்றதை இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க நிதியாக வழங்கியுள்ளார் தூத்துக்குடி யாசகர் ஒருவர்.  தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் புல்பாண்டியன். இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குடும்பத்தினரைவிட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம்பெற்று வாழ்ந்துவரும் இவர், தனது தேவைக்கான பணம் போக எஞ்சிய பணத்தை கல்வி மற்றும் ஏனைய மக்கள் பணிகளுக்காக தானமாக வழங்கிவருகிறார். அந்தவகையில் கொரோனா காலத்தில் மக்கள்படும் துன்பத்தையறிந்து யாசகம்பெற்று அவர்களின் துயர்நீக்க நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில் … Read more

மாநிலங்களவையில் தொடரும் பாஜக செல்வாக்கு!

ஜூன் மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 20 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற வாய்ப்பு இல்லை என்றாலும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியை மாநிலங்களவையில் தோற்கடிக்க தேவையான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லை என்கிற களநிலவரம் தொடர்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மாநிலங்களவை வலு … Read more

லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர் – 10 மில்லியன் வியூஸ்; ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர், யூ-டியூபில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இந்தப்படத்தின் … Read more