தூர்வாரும் பணிகளால் குறுவையில் 5.20 லட்சம் ஏக்கர், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கர் சாகுபடி உயரும்: தமிழக அரசு எதிர்பார்ப்பு
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள தூர்வாரும் பணிகளின் மூலம் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்று (மே 31) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் … Read more