2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம்; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் புருலியா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மகாராஷ்ட்ர முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கும், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்தார். ஒத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை … Read more

தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பு – 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி – விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்துள்ளார். 10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த … Read more

நேபாள விமான விபத்து: பிரிந்த தம்பதியின் ரியூனியன் பயணம் சோகத்தில் முடிந்தது

நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று மீண்டும் ஒன்றிணைந்த தம்பதியர் தாங்கள் சென்ற முதல் “ரியூனியன்” பயணத்தின்போது நேபாள விமான விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர் 54 வயதான அசோக் திரிபாதி. இவரது மனைவி வைபவி பந்தேகர் திரிபாதி, தானே நகரின் பல்கம் பகுதியில் உள்ள ருஸ்தோம்ஜி அதீனா அடுக்குமாடி குடியிருப்பில் 22 வயதான அவரது மகன் தனுஷ், 15 வயதான மகள் ரித்திகா ஆகியோருடன் வசித்து வந்தார். கணவரிடம் விவாகரத்து பெற்ற … Read more

‘மாநாடு’ ஒட்டுமொத்த வசூல் இதுதான் – 5 மாதங்களுக்குப் பிறகு வெளியிட்ட தயாரிப்பாளர்

நடிகர் சிம்பின் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ‘மாநாடு’ படத்தின் வசூல் குறித்த தகவலை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. டைம் லூப் திரைக்கதையில் உருவான இந்தப் படம் ரசிர்களுக்கு புரியும் வகையில் காட்சிகள் இருந்ததால், பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பல சர்ச்சைகளில் … Read more

இஸ்ரோவில் படிக்க ஆசையா?: மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

புதுடில்லி: விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாக, ஆன்லைன் முறையில் இலவச சான்றிதழ் படிப்பை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கண்ணோட்டம் என்ற தலைப்பில் விண்வெளி குறித்த பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு கற்றுத்தரும் விதமாக இஸ்ரோ, புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10 வயதுக்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் சேரலாம். எம்.ஓ.ஓ.சி.,யின் ஒரு பகுதியாக ஐ.ஐ.ஆர்.எஸ் … Read more

தொடரும் தோல்விகள் – மீண்டும் இயக்குனராகும் கங்கனா

தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தில் நடித்தார் கங்கனா ரனாவத். ஏ.எல்.விஜய் இயக்கிய அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதேபோல் ஹிந்தியில் தாக்கட் என்ற ஒரு படமும் கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியானது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் ரூ.5 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படி தனது படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை கொடுத்து வருவதால், தற்போது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு கதையை எமர்ஜென்சி என்ற பெயரில் … Read more

டிவிஎஸ் பங்குகளை மொத்தமாக விற்கும் மஹிந்திரா & மஹிந்திரா.. என்ன காரணம்?

வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (TASL) நிறுவனத்தின் 2.76 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில் அந்தப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு ரூபாய் 45 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் நிறுவனத்தின் பங்குகளை ஜூன் 22ஆம் தேதிக்குள் விற்கும் நடவடிக்கைகளை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு கைகளுக்கு மாறிய டிவிஎஸ்.. வேணு சீனிவாசன் முடிவு..! மஹிந்திரா … Read more

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூவர் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையின் தலைமன்னார் தம்மென்ன கடற்படை முகாம், கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் படி, தலைமன்னார் இருந்து 1.2 கடல் மைல் தொலைவில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள இந்த தங்க நகைகள் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை உபதடுப்பு அலுவலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.912 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. … Read more

விஜய் டி.வி ராமர் ஒரு அரசு அதிகாரி… அதுவும் மதுரையில்!

தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் என்றாலே நினைவுக்கு வருவது விஜய் டி.வி பிரபலங்கள். அதிகமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி ரசிகர்கள் மத்தியில் காமெடி கலைஞர்களை பிரபலப்படுத்திய பெருமை விஜய் டிவிக்கு உண்டு. இதில் என்னம்மா இப்படி பண்றீங்ளேமா என்ற ஒற்றை வரியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராமர். என்னம்மா ராமர் என்றால் அனைவருக்கும் அத்துபடி என்று சொல்லும் காலம் போய் தற்போது ராமர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரு நபராக மாறிவிட்டார் ராமர். ஆத்தாடி என்ன … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்து விபத்து..!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மைசூர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது செம்மண் திட்டு என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து … Read more