ஸ்டீவ் பக்னரும் சிட்னி டெஸ்ட்டும்… ஞாபகம் இருக்கிறதா சச்சின் ரசிகர்களே? | HBD Steve Bucknor

புல் போர்த்திய மைதானத்தில் ஆடப்படும் கிரிக்கெட் மட்டும்தான் இந்த ஆட்டத்தை இத்தனை ஆழமாக ரசிக்க வைக்கிறதா? அடிக்கப்படும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் வீழ்த்தப்படும் விக்கெட்டுகளும் அவற்றை உற்பத்தி செய்யும் வீரர்களும் மட்டும்தான் இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றனரா? நிச்சயமாக இல்லை. இந்த ஆட்டத்தை சார்ந்து இயங்கும் மற்ற விஷயங்களுமே கூட இதன் மீதான சுவாரஸ்யத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. ஹர்ஷா போக்லேவின் கமெண்ட்ரி இல்லாத ஆட்டமும், உடல் முழுவதும் தேசியக்கொடியை வரைந்து ‘சச்சின்… சச்சின்…’ என ஆராவாரமிடும் … Read more

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு..

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை 9602 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய 86912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவிப்பு தமிழ்நாடு, மகாராஷ்ட்ரம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை விடுவிப்பு இன்று வரையிலான நிலுவைத்தொகை முழுவதையும் விடுவித்து உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு… Source link

“எங்கள் ஆதரவாளர்களை கைது செய்து பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்

கோவை: “திரும்பத் திரும்ப எங்கள் கட்சி ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது” என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தெந்த வாக்குறுதிகளை அளித்து … Read more

'3 ஆண்டுகள் மட்டுமே புடின் உயிருடன் இருப்பார்' – உளவுத்துறை ஷாக்!

புற்றுநோய் முற்றி விட்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றி விட்டதால் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை! ஆதங்கம் வெளியிட்டுள்ள பெண்

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை தான் இருப்பதாக பெண்ணொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வீட்டுக்கூலி கட்டுவதா? சாப்பிடுவதா? 11ஆம் மாதத்திற்குள் கடும் பஞ்சம் ஏற்படும் என சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? அதிகாலை நான்கு மணிக்கு சென்றோம் மண்ணெண்ணெய் எடுப்பதற்கு. மழைக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்த போதும் எனினும் மண்ணெண்ணெய் … Read more

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம்.. மரக்கன்று நட்டு துக்கம் அனுசரித்த அதிபர் ஜோ பைடன்..!

அமெரிக்காவில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். பைடன் உட்பட அனைவரும் மண்வெட்டியால் மண்ணை வாரி குழியில் போட்டு மங்கோலியா மரக்கன்றை நட்டுவைத்த பின்னர், கைகளை கோர்த்து நின்று பிரார்த்தனை செய்தனர். முன்னதாக ஆர்லிங்டனில் உள்ள வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பைடன் அஞ்சலி … Read more

ஜேர்மன் குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள்: ஓரளவு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம், அது குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் எப்போது கொண்டு வரப்படும் என்பது முதலான சில விடயங்கள் குறித்து அவர் கூறிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் வாழ்வோரில் சுமார் 14 சதவிகிதம்பேர் வெளிநாட்டு பாஸ்போர்ட் ஒன்றைத்தான் வைத்திருக்கிறார்கள். … Read more

15 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு! டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாட்டில் 15 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, அவர்கள் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். இதுதாடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  15  துணை காவல், கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் கண்காணிப்பாள ராக பதவி உயர்வு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, கே.பிச்சை, கே.எஸ். ரவிசந்திரன், டி. லோகநாதன், பி. வீரமணி, எஸ். ஈஸ்வரமூர்த்தி, வி. செங்கமலகண்ணன், எஸ். லயோலோ இக்னடியஸ், டி. ராஜகுமார், ஆர். ராஜசேகரன், ஜி.ஆர். … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்னி பாலா (36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தைச் (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராவார். இன்று காலை ஆசிரியை ராஜ்னி பள்ளிக்கூடத்தில் வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது, பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னியை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பயங்கரவாதிகள் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்த ஆசிரியை ராஜ்னியை மீட்ட … Read more

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

புகையிலை பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் கொடிய விளைவுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இந்தியாவின் பிரபலமான மணல் சிறப்க் கலைஞர் பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒடிசா கடற்கரையில் பல பெரிய சிகரெட் துண்டுகளின் மேல் பெரிய எலும்புக்கூடு படுத்திருப்பது போன்ற சிற்பம் … Read more