#பள்ளிக்கல்வி || வரும் கல்வியாண்டு முதல் இந்த பாடம் ரத்து செய்யப்படுகிறது.!

வரும் கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடமாக டெய்லரிங், பியூட்டிஷியன் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இதனை வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்ய உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மத்திய அரசின் நிதியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் தொழிற்கல்வி டெய்லரிங், பியூட்டிஷியன் பாடங்கள் ரத்து செய்யப்படுகிறது.  … Read more

அமைச்சர் பதவி: வலியுறுத்தும் திமுக-வினர்… அறிக்கைவிட்ட உதயநிதி – தர்மசங்கடம் யாருக்கு?

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே அந்தக் கட்சிக்குள் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பேச்சு எழுந்தபோதே தி.மு.க-வின் சுற்றுச் சூழல் அணி சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டு ஓராண்டாகியிருக்கும் நிலையில், தற்போது பல்வேறு அமைச்சர்களும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் … Read more

“இன்னும் 20 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும்” – அண்ணாமலை கெடு

இன்னும் 20 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால், மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்காக சென்னை எழும்பூரில் பாஜகவினர் கூடினர். ஆனால் அவர்களை முன்னேறிச் செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மாவட்டம் தோறும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் … Read more

மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மருத்துவர் விஜயலட்சுமி

மயிலாடுதுறை: மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்கவைத்த ரமணி மற்றும் அவரது மகளும் மருத்துவருமான விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவராக்கிய அவரது தாயார் ரமணி குறித்து தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் விஜயலட்சுமிக்கு தனது … Read more

பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம்: இறுதிச் சடங்கில் குவிந்த ரசிகர்கள், பொதுமக்கள்

பாடகர் சித்து மூஸ் வாலா உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அவரது ரசிகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ் வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) படுகொலை செய்யப்பட்டார். சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ் வாலா. அவருக்கு பணம் … Read more

iQOO Neo 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Neo 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தான் iQOO. இந்த நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது Neo 6 ஸ்மார்ட்போன். இந்தியாவில் அறிமுகமாகி உள்ள முதல் Neo சீரிஸ் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேம் விளையாட இந்த போன் சிறப்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் … Read more

Hardik Patel: பாஜகவில் ஐக்கியமாகிறார் ஹர்திக் படேல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், வரும் 2 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக … Read more

எகிப்தில் அகழ் வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை வெளியிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.!

எகிப்து தலைநகர் கெய்ரோவின் சக்காரா நெக்ரோபோலிஸில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 2018-ல் நடந்த அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 250 சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், 150 பழங்கால கடவுள்கள், தெய்வங்களின் வெண்கல சிலைகள் பிற தொல்பொருட்களை பொது மக்கள் பார்வைக்காக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.  Source link

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் மூசே வாலா உடலுக்கு இறுதிச் சடங்கு… ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி…

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வலாவின் இறுதிசடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 29-ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வலாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட  மூஸ்வலாவின் உடல்,  அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. வழி நெடுகிலும் குவிந்திருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  Source link

உக்ரைன் எல்லையில் இராணுவ பயிற்சி நடத்தவுள்ள ரஷ்யாவின் நட்பு நாடு

ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் விரைவில் உக்ரைன் எல்லைக்கு அருகே ராணுவப் பயிற்சி நடத்த உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பெலாரஸின் தேசிய செய்தி நிறுவனமான பெல்டா, கோமல் பிராந்தியத்தில் அணிதிரட்டல் பயிற்சியை விரைவில் நடத்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த பகுதி தற்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் எல்லையில் உள்ளது. கோமல் பகுதி ரஷ்யாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது. வரும் ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை, இராணுவ ஆணையர்கள், இராணுவ நிர்வாக அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளுடன் … Read more