லாக்டவுனில் தளர்வுகள்.. துள்ளிக் குதிக்கும் சீன மக்கள்.. இந்தியாவுக்கும் நல்ல விஷயம் தான்.. எப்படி?

உலகிற்கு கொரோனாவை அறிமுகப்படுத்திய டிராகன் தேசம், கடந்த 2 மாதங்களாக லாக்டவுனால் சிக்கி சீரழிந்து வந்தது. இதன் காரணமாக உலக நாடுகளில் மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் பணவீக்கம் மிகப்பெரியளவில் உச்சம் தொட்டது. இது பொருளாதாரத்தில் மிகப் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரு மாதங்களுக்கு பிறகு லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரவிருக்கும் மாதங்களில் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய … Read more

தபால் துறையில் 38,926 காலியிடங்கள்; தேர்வு இல்லாமல் வேலை: இன்னும் சில நாள் மட்டுமே அவகாசம்

India post recruitment 2022 for 38926 GDS posts how to apply details: போஸ்ட் ஆபிஸ் ஜி.டி.எஸ் பணிக்கு விண்ணபிக்க இன்னும் 5 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் … Read more

பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி தீப்பிடித்து விபத்து.. கூலித் தொழிலாளி படுகாயம்.!

பெரும்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்தது, இதில் தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமேரி அப்பதான் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக வர்கீஸ் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பெரும்பாறைக்கு சென்றுள்ளார். அப்போது மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த தனியார் … Read more

தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி ஒருவர் UPSC தேர்வில் 338வது இடம் பிடித்துள்ளார். மைக்கேல்பட்டி கிராமத்தில் பள்ளிக்கு செல்லாத தந்தை, ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாத தாயாருக்கு மகளாகப் பிறந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வேளாண் பொறியியலில் தங்கப்பதக்கம் பெற்றவரான ரெனிட்டா, UPSC தேர்வில் தேசிய அளவில் 338வது இடம் பிடித்தார். விரைவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக இருக்கும் ரெனிட்டாவிற்கு மைக்கேல்பட்டி கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.   … Read more

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூரில் வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருப்பதி கோயிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு இன்று (மே 31) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” திருச்செந்தூர் கோயிலில் ரூ.200 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். திருச்செந்தூர் கோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை … Read more

கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்

கொல்கத்தா: இந்தியத் திரையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில்  அவர் பாடல்களை பாடியுள்ளார். கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே,  தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி … Read more

வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளத்தையே இந்தியா விரும்புகிறது- ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: மத்திய கலாச்சார அமைச்சகம் இந்திய மரபணு வரலாறு மற்றும் இந்தியாவில் இனத்தின் தூய்மை குறித்து ஆய்வு திட்டத்திற்காக டிஎன்ஏ விவரக்குறிப்பு கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிநவீன இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பூர்வீக இந்தியர்களா? என கேள்வி எழுப்பினார்.  இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆரியர்களா? … Read more

பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் அரசு பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த காஷ்மீர் பண்டிட் ஆசிரியையை சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர்  ரஜ்னி (36). இவர் குல்காம் மாவட்டத்தில் கோபால்போராவில் உள்ள  அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ரஜ்னியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்த ரஜ்னியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மீண்டும் வருகிறார் அபிதா

விக்ரம் நடித்த சேது படத்தில் நடித்தவர் அபிதா. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சீரியல் பக்கம் வந்தார். அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து சாதனை படைத்த சீரியல்களில் 'திருமதி செல்வமும்' ஒன்று. இதில் ஹீரோவாக சஞ்சீவும், ஹீரோயினாக அபிதாவும் நடித்திருந்தனர். ஒரு சாதரண மெக்கானிக் மற்றும் மனைவிக்கு இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அபிதாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. … Read more