ஓபிஎஸ் குற்றம் சாட்டிய வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம்!

சென்னை; ஓபிஎஸ் குற்றம்சாட்டிய வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். ஓபிஎஸ்  வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று மறுத்துள்ளார். இதுகுறித்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, பிரிவு 24(1)-ன்படி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம் 1987ஆம் ஆண்டு … Read more

மக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்- கேரள முதல்வர்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன், புகையிலை பயன்பாடு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், கொரோனா தொற்று நோயால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, புகையிலையைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், புகையிலையால் கொடிய பக்கவிளைவுகளும் ஏற்படுவதால் மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எனவே … Read more

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த … Read more

செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை செய்து வருகிறது. கோடை வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஓடினர். உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ’புகையிலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி திருச்செங்கோடு பல்மருத்துவ கல்லூரி சார்பில் மினி மாரத்தன் போட்டி நடத்தப்பட்டது. நாமக்கல் ரோடு … Read more

துபாயில் துஷாரா விஜயன்: ஸ்கை டைவிங் செய்து அசத்தல்

துபாயில் நடிகை துஷாரா விஜயன் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் இதயங்களை வாரிக்கொண்டார் நடிகை துஷாரா விஜயன். ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு யதார்த்தமான நடிப்பால் பாராட்டுக்களைக் குவித்தார் துஷாரா. தற்போது, பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, வசந்தபாலனின் ‘அநீதி’ உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்து வரும் துஷாரா விஜயன் துபாய் சென்றுள்ளார். அங்கு … Read more

மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா ரிலீஸ் எப்போது?

மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா' திரைப்படம் உருவாகி வருகிறது. 1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான 'காசேதான் கடவுளடா'வை இந்த காலத்திற்கு ஏற்றவாறு ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்குகிறார். நடிகை ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது ஜூன் … Read more

24 மாநிலங்களில் 70,000 பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று போராட்டம்: ரீடெயில் விற்பனை பாதிக்குமா?

24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 70 ஆயிரம் பெட்ரோல் டீலர்கள் இன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருளை வாங்க மாட்டோம் என போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தபோதிலும் பெட்ரோலுக்கான கமிஷன் திருத்தம் செய்யப்படவில்லை என்றும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 31ஆம் தேதி அதாவது இன்று 24 மாநிலங்களில் உள்ள 70 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் … Read more