அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம்.!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அவருக்கு 80 வயது தொடங்க இருப்பதை முன்னிட்டு நேற்று மாலை நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள், யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதற்கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலையில் 2-ம் கால பூஜைகள் நடைபெற்றன. அதில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Source link