Free JioFi Router: புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளான் – வைஃபை ரவுட்டர் இலவசமாம்!

Free JioFi Router: ரிலையன்ஸ் ஜியோ , நாட்டில் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது இலவச ஜியோஃபை ரவுட்டருடன் மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. வணிக பயன்பாட்டை கருத்திற்கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பல நன்மைகள் வழங்கப்படுகிறது. அதிவேக டேட்டாவை பயனர்கள் எந்த இடத்தில் இருந்தும் அனுபவிக்க முடியும். Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்! ஜியோ அறிவித்துள்ள இலவச JioFi Router … Read more

கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது…. தாய் வெளியிட்ட தகவல்

பண்டாரகம –  அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.  கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.  கடைக்கு சென்ற சிறுமி மாயம் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி … Read more

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகள் நிறைவு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றுகிறார்.   பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் செல்கிறார். சிம்லாவில் நடைபெறும் ஏழை மக்கள் நலன் காக்கும் கரீப் கல்யான் திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து, அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் … Read more

தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் – வைரமுத்து இசைக் கூட்டணி; பாரதிராஜா, கௌதம் மேனன் நடிப்புக் கூட்டணி!

‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ ஆகிய படங்களை இயக்கிய தங்கர் பச்சான், சில வருட இடைவேளைக்கு பின் மீண்டும் இயக்குநராகியிருக்கிறார். ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தை அடுத்து ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனனுடன் யோகி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்கள் மூவருமே இதுவரை நடித்திராத கதாபாத்திரம் இது என்கிறார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தங்கர் … Read more

பிரித்தானிய ராணியிடம் துணிச்சலாக அந்த கேள்வியை கேட்டேன்: பிரபல நடிகர்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பிரித்தானியாவில் ராணி எலிசபெத், பராக் ஒபாமா ஆகியோருடன் கலந்துகொண்ட இரவு விருந்து குறித்த நினைவுகளை பகிர்ந்தார். பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது 2011ஆம் ஆண்டு பக்கிங்கம் அரண்மனையில் இரவு விருந்தில் பங்கேற்றது குறித்து பகிர்ந்துகொண்டார். அந்த விருந்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது மனைவி மிட்சேலுடன் கலந்துகொண்டார். பிரித்தானிய ராணியுடன் விருந்தில் கலந்துகொள்வது … Read more

தமிழ்நாடு முழுவதும் 25000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு.!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 25000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் காலி பணியிடங்களாக  உருவாகியுள்ளது. தமிழகஅரசு ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்திய நிலையில், இன்று ஒரேநாளில் 25ஆயிரம் பேர் பணி ஓய்வு பெறுகின்றனர். இதுவே ஒய்வுபெறும் வயது 58ஆக தொடர்ந்திருந்தால், மேலும் 50ஆயிரம் பேர் ஓய்வு பெற்றிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும், … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கோட்டையை நோக்கி பாரதிய ஜனதா பேரணி- அண்ணாமலை தலைமையில் திரண்டனர்

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்காதது மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி … Read more

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் இந்த ஏலத்தை நடத்தியது. முதல் கட்டத்தில் 1805 பொருட்களில் 240 பொருட்களும் 2-வது கட்ட மாக 2772 பொருட்களில் 612 பொருட்களும் ஏலம் விடப்பட்டது. 3-வது கட்டமாக 1348 பொருட்கள் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 391 பொருட்கள் ஏலம் போனது. இந்த … Read more

சரிவுப்பாதையில் சீன மக்கள் தொகை: குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்

பீஜிங் : மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை குறைந்தது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பிரிவின் கணக்குப்படி, சீன … Read more

நன்னிலம் அருகே தூர்வாரப்பட்ட கொத்தங்குடி வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர்: நன்னிலம் அருகே ரூ.9.95 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட கொத்தங்குடி வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார்.