தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பெண் உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரும்- தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார், ஆயில்பட்டியில் முன் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதோடு, பேருந்தும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்தவர், கல்லூரி மாணவிகள் என … Read more

தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி சென்னையில் பாஜகவினர் பேரணி

சென்னை: பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலையைப் பொருத்தவரை கடந்த மே 21-ம் தேதி, நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் பல்வேறு தரப்பிலும் … Read more

ஒரே இணையதளத்தில் நலத்திட்ட உதவி பெறும் வசதி – மத்திய அரசு அறிமுகம் செய்கிறது

புதுடெல்லி: அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் ஒரே இணையத்தில் பெறும் வகையிலான புதிய இணையதளத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது. இத்தகவலை பொருளாதார விவகாரத் துறை செயலர் அஜய் சேத் தெரிவித்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் ஜூன் 6-ம் தேதி 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த நாணயம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜூன் 9-ம் தேதி கடன் வசூல் … Read more

அமெரிக்க துப்பாக்கிச்சூடு எதிரொலி: கனடாவில் கை துப்பாக்கிகளுக்கு வருகிறது தடை

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, கனடாவில் கை துப்பாக்கிக்கள் வைதிருப்பதற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் டியூடெர்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையில் தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது தொடர்பாக மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. கைதுப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் … Read more

தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள 27 பக்க அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் அனுப்பப்படுவதாகவும், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது போன்ற குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு.!

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால், சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. டெல்லியில் … Read more

“பலூன் வெடிச்ச அந்த விபத்தை நினைச்சா இப்பவும் அதிர்ச்சியா இருக்கு!" – நடிகை லைலாவின் பர்சனல்

லைலா என்றால் சிரிப்பு! திரைத்துறையில் சிரிப்புக்கு இலக்கணம் வகுத்த லைலா, தன் கலகல சிரிப்பால் எல்லோரையும் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து, அமைதி அமைதி அமைதியோ அமைதியாக இருந்தவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீ-என்ட்ரிக்குத் தயாராகியிருக்கிறார். நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவரைச் சந்தித்தோம். லைலாவையும் சிரிப்பையும் பிரித்துப் பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமா? அதைச் சோதிக்கலாமே என குறும்பான செக்மென்ட்டுடன் வீடியோ பேட்டியைத் தொடங்கினோம். … Read more

ரஷ்யப்படைகளுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை… எனக்கு அது வேண்டும்: அடம் பிடிக்கும் புடின்

ரஷ்யா எக்கச்சக்க இழப்புகளை சந்தித்தாயிற்று, ஆனால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்றியே தீருவது என அடம் பிடித்து வருகிறார் புடின். இந்நிலையில், 30,000க்கும் அதிகமான படைவீரர்களை இழந்துவிட்டதால் உக்ரைனில் ரஷ்ய இராணுவம் நிலைகுலையும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரித்தானியாவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அது வெற்றிக்காக ரஷ்யா கொடுக்கும் விலை என்று கூறும் புடின், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, … Read more

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம்! மத்தியஅரசு

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம் என்றும்,  விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 15ந்தேதி கடைசி நாள் என்றும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. அதற்க அடுத்தபடியாக பத்ம விருதுகள் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.  அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகளை மத்தியஅரசு  வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் … Read more

தமிழ்நாட்டில் சிகரெட், பீடியால் 8 ஆயிரம் டன் கழிவுகள்- ஆய்வில் தகவல்

சென்னை: உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இதையொட்டி நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேரி அன்னே அறக்கட்டளை மற்றும் தி யூனியன் அமைப்பு நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 8 ஆயிரம் டன் புகையிலை கழிவுகள் வெளியாவது தெரிய வந்துள்ளது. இதில் சிகரெட் கழிவுகள் 4,039 டன், பீடி கழிவுகள் 606 டன் ஆகும். மற்றவை புகையில்லா புகையிலை கழிவுகளாகும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் … Read more