இரவு வானில் விண்மீன்களை பார்த்து ரசிக்க 5 ஸ்டார்கேஸிங் ஆப்ஸ்!

இரவு வானத்தை, அதன் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரபஞ்சத்தைப் பார்ப்பதில் ஏதோ ஒரு உற்சாகம் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியால், இரவு வானத்தில் விண்மீன்கள் எங்கு உள்ளன என்பதைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உங்களை அனுமதிக்கும் பல நட்சத்திரங்களைப் பார்க்கும் ஆப்ஸ் உள்ளன. இங்கே, நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில சிறந்த நட்சத்திர ஆப்ஸ் (stargazing apps) பட்டியலை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம். கூகுள் ஸ்கை கூகுள் மேப்ஸின் நட்சத்திர அனலாக் தான் கூகுள் ஸ்கை. கூகுள் ஸ்கை மூலம், ஹப்பிள் ஸ்பேஸ் … Read more

கேரள லாட்டரியில்.. தமிழக டாக்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரூ.10 கோடி பரிசு.!

கேரளா லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் பிரதீப்குமார் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் என்பவரும் கடந்த மே 15ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த தங்கள் உறவினரை அழைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது அங்கு விற்பனையான விஷு பம்பர் லாட்டரியை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அவர்கள் வாங்கியுள்ளனர். தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த லாட்டரி … Read more

டெல்லி: பண மோசடி வழக்கில் கைதான சுகாதாரத்துறை அமைச்சர்… பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் பாஜக!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்துவருகிறார். டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைதுசெய்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்புடைய வழக்கில், சத்யேந்திர ஜெயின் கைதுசெய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, சத்யேந்திர ஜெயினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர். … Read more

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் … Read more

சந்தை வரி விதிப்பு தொடர்பான ஓபிஎஸ் அறிக்கை; உண்மைக்குப் புறம்பான கூற்றுகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: “தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக தவறான புரிதலின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளாகும்” என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன மறுப்பு அறிக்கை: தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, … Read more

முஸ்லிம் தரப்பு வாதங்கள் இன்னும் முடியவில்லை; கியான்வாபி வழக்கு ஜூலை 4-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 கியான்வாபிக்கு பொருந்துமா என்பதன் வழக்கு ஜூலை 4-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், முஸ்லிம் தரப்பு வாதங்கள் இன்னும் முடியவில்லை. உத்தரப் பிரதேசம் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்காரக் கவுரி அம்மன் தரிசனத்திற்கு வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த வாரணாசியின் சிவில் நீதிமன்ற உத்தரவின்படி, கியான்வாபி மசூதியில் களஆய்வு நடைபெற்றது. இதைத் தடுக்க முன்னதாக கியன்வாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு … Read more

சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு! நேற்று முதல் புதிய நடைமுறை

சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்லும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு தொழிலாற்றும் பொறிமுறையொன்று நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.15 வரையில் அலுவலகத்திற்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பணியாளர்கள் வீடுகளில் … Read more

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல், 3ல் 2 பங்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்தார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான எண்ணெய்களையும் தடை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த தீர்மானம் ஹங்கேரியின் எதிர்ப்பால் கடந்த 16-ம் … Read more

காஷ்மீரில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதில் சம்பாவைச் சேர்ந்த 36 வயதான ரஜினி பாலா என்னும் ஆசிரியை படுகாயம் அடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு … Read more

இந்த நாட்டிற்கு மட்டும் போகாதீங்க.. ஆபத்து! இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

ஈரான் நாட்டின் அச்சுறுத்தல் இருப்பதால் துருக்கி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானின் கர்னல் ஹசன் சையத் கோடேய் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஈரானில் பரபரப்பு நிலவியது. இந்த கொலைக்கு காரணம் இஸ்ரேல் தான் எனவும், ஹசன் மரணத்திற்கு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் கூறியது. Photo … Read more