பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி..!!

பாரீஸ், ‘ கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். பிரெஞ்சு … Read more

ஈரானில் கட்டிடம் இடிந்து விழுந்தது; 32 உடல்கள் மீட்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தென்மேற்கே குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் நகரில் 10 அடுக்கு வர்த்தக கட்டிடம் ஒன்று இருந்தது. மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து வந்துள்ளன. பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூட கூடிய தெருவில் அமைந்த இதனை சுற்றி வர்த்தகம் மற்றும் மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், கட்டிடம் திடீரென கடந்த வாரம் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து, மீட்பு … Read more

3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்

இந்திய தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான எச்டிஎஃப்சி வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 4000 முதல் 6000 வரை புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்தார். ஒவ்வொரு ஆண்டும் 2000 புதிய கிளைகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. டெல்லிவரியின் காலாண்டு நிதி அறிக்கை: எத்தனை கோடி லாபம் தெரியுமா? இலக்கு அதிகரித்து வரும் … Read more

புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

மனித உயிர்களை மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் புகையிலையை ஒழிக்க உறுதியேற்போம் என்று, பா.மக. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “இன்று #WorldNoTobaccoDay. “புகையிலை: நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்” (Tobacco: Threat to our environment) என்பதை இந்நாளின் நோக்கமாக #WHO அறிவித்துள்ளது. உடல்நலக் கேடு மட்டுமின்றி விவசாயம், தயாரிப்பு, விநியோகம், குப்பை என அனைத்திலுமே புகையிலை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், புகையிலையால் … Read more

பாம்பைக் கூட சமாளிப்போம்; பல்லின்னா பயம்… அப்போ நீங்க இதைப் பண்ணுங்க!

நம் வீட்டில் காணப்படும் பல்லி, ஒரு குளிர் ரத்தப் பிராணி. அண்டார்டிகா கண்டம் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன. சாதாரண வீட்டு பல்லிகள், விஷமற்றவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை. மேலும் அவை ஈக்கள், கொசுக்கள், கரையான்கள், கரப்பான் என பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. எனவே அவற்றை கொல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக அவற்றை துரத்துவது நல்லது. நீங்கள் பல்லிகளுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் வீடுகளில் பல்லிகள் வராமல் தடுக்கும் வழிகளை இங்கே பார்க்கலாம். வீட்டில் பல்லிகளை … Read more

Greenest beer: சிறுநீரிலிருந்து பீர் தயாரிக்கும் சிங்கப்பூர் நிறுவனம்; ஆச்சர்யப் பின்னணி!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மறுசுழற்சி முறையில் பொருட்களைத் தயாரிக்க பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறது சிங்கப்பூர். அந்தவகையில் குடிப்பதற்கு இயலாத சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து ‘நியூ வாட்டர் (Newater)’ என்ற பெயரில் குடிப்பதற்கு ஏதுவானகுடி தண்ணீராக மாற்றி வருகிறது சிங்கப்பூர். இந்த ‘நியூ வாட்டர்’ பாதுகாப்பான குடிநீரின் சர்வதேச தரத்தைக் கடைபிடிப்பது மட்டுமில்லாமல் ‘பீர் (beer)’ போன்ற மதுபானங்கள் தயாரிப்பதற்கு ஏதுவான நீர் என்று கூறப்படுகிறது. இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் … Read more

இது என்ன புதுசா இருக்கு?… ஒட்டகத்தை பயன்படுத்தி மணல் கடத்தல்..!

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். அதனை மாட்டு வண்டியில் கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனைக் கண்டு மாட்டு வண்டியுடன் சேர்த்து ஒட்டகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், ஒட்டகத்தை முறையாக … Read more

டெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) ஆய்வு செய்தார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த மே 24-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் தமிழக நீர்வளத்துறை சார்பில், சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் இரண்டாவது … Read more

மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் போட்டி

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகாவில் இருந்து அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மகாராஷ்டிராவில் இருந்து அமைச்சர் பியூஷ் கோயலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாட்டின் 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்தப் பதவிகளுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான 18 வேட்பாளர்கள் கொண்ட 2 … Read more

திருமலையில் குவியும் பக்தர்கள்: திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டம்!

அடை மழையானாலும், சுடும் வெயிலானாலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திரளும் கூட்டம் குறைவதே இல்லை. கோடை விடுமுறை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது திருமலையில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டமாய் காட்சியளிக்கின்றன. அதிலும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. எனவே அந்த நாட்களில் ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசன முறைகளை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில் 70 ஆயிரத்தை தொடுகிறது. தரிசன டிக்கெட்டுகளை … Read more