கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் 19 குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து கனடாவில் நேற்று இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் புதிய நடவடிக்கைகள் தேவை என ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். துப்பாக்கி இறக்குமதி மற்றும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Source link