அருகே இருந்த பிறந்தநாளும் திருமணமும்…! சோகத்தில் முடிவடைத்த சித்து மூஸ்வாலாவின் வாழ்க்கை

வரும் ஜூன் 17ஆம் தேதி சித்து மூஸ் வாலா தனது 29வது பிறந்தநாளை பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் சுட்டுக் கொல்லபட்டிருப்பது அவரது டும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா (28), கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறைக்கப்பட்டு வருகிறது. … Read more

கலங்கரை விளக்காக வழிகாட்டுகிறது | Dinamalar

புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி கலங்கரை விளக்காக இருந்தது என, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நம்பிக்கை பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று மாணவர்கள் திரளாக வந்து கருத்தரங்கில் பங்கேற்று குறிப்புகள் எடுத்தனர். ஒவ்வொரு அமர்வு முடிந்த பிறகும் நேரடியாக கல்வியாளர்களை அணுகி விளக்கம் பெற்றனர். மாணவர்கள் பகிர்ந்தவை:ஆதம்கனி, விழுப்புரம்: அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது என கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு … Read more

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

புதுடெல்லி, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் கலால் வரி குறைப்பின் காரணமாக சில்லறை விற்பனை விலை உடனே மாற்றியதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி இன்று ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக விற்பனையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். மேலும், … Read more

'இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே எனது லட்சியம்' – ஹர்திக் பாண்ட்யா பேட்டி

ஆமதாபாத், 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து மகுடம் சூடியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை 130 ரன்னில் கட்டுப்படுத்திய குஜராத் அணி அந்த இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. அதிகபட்சமாக சுப்மான் கில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த … Read more

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு எதிரொலி: கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம் – கனடா அதிரடி அறிவிப்பு

ஒட்டாவா, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் … Read more

இன்று இந்தியாவின் ஜிடிபி வெளியாகலாம்.. மோசமான தாக்கம் இருக்கலாம்.. கவலையளிக்கும் கணிப்புகள்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான ஜிடிபி தரவானது இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சற்று மெதுவான வளர்ச்சியிலேயே இருந்து வருகின்றது. தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் விலைவாசி, தேவை சரிவு, நுகர்வோர் செலவினங்கள் சரிவு, முதலீடுகள் சரிவு என -பல காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதோ ? என்பது பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. … Read more

Tamil News Live Update: மதுரையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. 1,600 டன் குப்பைகள் தேக்கம்!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 வேதியியல் தேர்வு.. போனஸ் மதிப்பெண்! பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் … Read more

6 மாதங்கள் காத்திருப்பு ஏன்? அவசர சட்டம் தேவை – தமிழகத்தின் மிகப்பெரிய உயிர்க்கொல்லிக்கு முடிவுகட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை  விவகாரத்தின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வந்த அரசு, இப்போதாவது புதிய சட்டம் இயற்றுவது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு என்ற நிலைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் தெருவுக்கு வர … Read more

இளையராஜாவுக்கு 80 வயது பூர்த்தி – திருக்கடையூரில் ஆயுள் விருத்தி ஹோமம்! இதன் சிறப்புகள் என்னென்ன?

பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா, தனக்கு 80 வயது பூர்த்தி ஆவதையொட்டி, திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீன பரிபாலனத்திலுள்ள இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இளையராஜா மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் 16’ அருளிய தலமாதலால் இங்கு … Read more

கள்ளக்குறிச்சி அருகே கறி விருந்து சாப்பிட்டு வாந்தி மயக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரை அடுத்த மேலந்தல் கிராமத்தில் கறி விருந்து சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும்போது, கரும்பு வெட்டி முடித்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது வழக்கம். அந்த … Read more