உலகளவில் வலிமையான விமானப்படை: சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-ம் இடம் பிடித்தது

புதுடெல்லி: உலகளவில் வலிமையான விமானப் படையைக் கொண்டுள்ள நாடுகள் பட்டியலை (2022) வேர்ல்டு டிரெக்டரி ஆப் மாடர்ன் மிலிடரி ஏர்கிராப்ட் (டபிள்யூடிஎம்எம்ஏ) வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இந்திய விமானப் படை, சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப் படைகளை பின்னுக்குத் தள்ளி உள்ளது. டபிள்யூடிஎம்எம்ஏ, 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா … Read more

ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே சென்னைக்கு மாற்றம்!

மும்பை சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் அதிரடி சோதனை நடத்தி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனிடையே, வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 21 … Read more

உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை.!

2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் படி அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் படி ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக 3 ஆயிரத்து 809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தற்போது கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. Source link

உங்களுக்குத் தொப்பை ஏன் பெரிதாக இருக்கிறது? நகராட்சித் தலைவரிடம் மம்தா பானர்ஜி கேள்வி

“உங்களுக்குத் தொப்பை ஏன் இவ்வளவு பெரியதாக இருக்கிறது?” என்று நகராட்சித் தலைவர்  ஒருவரை பார்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புரூலியாவில் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டத்தில் பொதுத்துறை பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து அவர் சரமாரியாக கோபத்துடன் வினா எழுப்பிய வண்ணம் இருந்தார். அப்போது Jhalda நகராட்சி தலைவர் சுரேஷ் அகர்வாலை அழைத்து பிரச்னைகள் குறித்து பேச சொன்னார். அவர் எழுந்து நின்ற போது … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜூன் 4ந்தேதி மின்நிறுத்தம்! மின்சார வாரியம் அறிவிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 4ந்தேதி (சனிக்கிழமை)  மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்த்தி மற்றும் பகிர்மா கழகம்  அறிவித்து உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் மின்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் அவசர பணிக்காக மின் நிறுத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைமின்நிலையங்களில் அவசர பணி, மின் சோதனை, பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 4ந்தேதி  காலை 9மணி முதல் மாலை 5மணி வரை … Read more

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை, தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இது போன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், … Read more

கோமா நிலையில் இல்லை- நித்யானந்தா புதிய பதிவு

புதுடெல்லி: குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும்  வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட … Read more

திருக்கடையூர் அருகே அனந்தமங்கலத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ராமசந்திரன் கால்வாயில் நிறைவடைந்த தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க இமாச்சல் பிரதேச செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இமாச்சல் பிரதேச மாநிலம் செல்கிறார். மோடி தலைமையிலான ஆட்சி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பாஜக பிரமுகர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி

திருப்பாச்சேத்தி அருகே பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்தார். திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் பிரபாகரன் (48). தீவிர பாஜக ஆதரவாளரான இவர், மோடி மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார். திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ள இவர், நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது கொத்தங்குளம் விலக்கு என்ற இடத்தின் … Read more