இந்தியாவில் மேலும் 2,338 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2,338 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 2,134 பேர் குணமடைந்துள்ளனர். 19 உயிரிழந்துள்ளனர். தற்போது 17,883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,15,574 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24, 630 ஆகவும் உயர்ந்தது.இந்தியாவில் நேற்று மட்டும் 13,33,064 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 193.45 டோஸ் ஆகவும் அதிகரித்தது. புதுடில்லி: … Read more

ஷாருக்கான் மகன் வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சென்னைக்கு இடமாற்றம்

மும்பை, 2021 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கப்பலில் பயணித்த இந்தி நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து போதைப்பொருள் … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? – தென்கொரியாவுடன் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? – தென்கொரியாவுடன் இன்று மோதல்ஜகார்த்தா, 11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் ‘டிரா’ கண்டது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. தென்கொரியாவை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.28 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கொரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே18 லட்சத்து 85 ஆயிரத்து 007 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை … Read more

ஷேர்சாட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் கூகுள்: எத்தனை மில்லியன் டாலர் தெரியுமா?

இந்தியாவின் சமூக வலைதள செயலியான ஷேர்சாட் நிறுவனத்தில் 300 மில்லியன் டாலர் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சீனாவின் சமூக வலைத்தள செயலிகளான ஹலோ, டிக்டாக் உள்பட ஒரு சில சமூக வலைதளங்களுக்கு இந்திய அரசு தடை விதித்ததை அடுத்து இந்தியாவின் சமூக வலைதளமான ஷேர்சாட் செயலிக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். குறிப்பாக டிக்டாக், ஹலோ தடை செய்யப்பட்ட ஒரே வாரத்தில் மில்லியன் கணக்கில் புதிய வாடிக்கையாளர்கள் ஷேர்சாட்டில் இணைந்தனர். இதனால் இந்நிறுவனத்தின் … Read more

தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்காதீர் – அமைச்சர் பதவி குறித்து உதயநிதி அறிக்கை

திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், பல இடங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ப்ராஜெக்ட் ஃபெலோ காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சேலம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : பெரியார் பல்கலைக் கழகம் பணியின் பெயர் : ப்ராஜெக்ட் ஃபெலோ கல்வித்தகுதி : எம்.எஸ்சி பணியிடம் : சேலம் தேர்வு முறை : எழுத்து தேர்வு … Read more

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 – திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனிடையே பிரதமர் நேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் குழந்தைகள் திட்டம் மூலம் மாதம் ரூ.4000 வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் … Read more

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்.. போலீசார் விசாரணை.!

சென்னையை அடுத்த மாங்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டிற்குச் சென்ற மர்ம நபர்கள் கத்திமுனையில் அவரைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். சுரேஷ்குமார் தனது வீட்டை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த நிலையில், முன்பணம் கொடுக்க சிலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி … Read more

அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன மோடி பிரதமரான பிறகு ஊழல் குறைந்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி கருத்து 

விழுப்புரம்: அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன. பிரதமராக மோடி வந்தபின் ஊழல் குறைந்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு மணி ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தப்பின் ஊழல் குறைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மொழி பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்தியாவை பொருத்தவரை எந்த ஒரு மொழியும் தேசிய மொழியும் … Read more