யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு – முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 685 பேர் தோ்வாயினர். முதல் மூன்று இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2021-ம்ஆண்டுக்கான பிரதான … Read more

நேபாள விமான விபத்து | கருப்புப் பெட்டி கண்டெடுப்பு; 22 சடலங்களும் மீட்பு

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 22 பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிறு (மே 29) காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய … Read more

உக்ரைன் பொருளாதாரத்தை மீட்க 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ரஷ்ய படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரைன் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைக்கு உடனடி நிதியாக 9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைனின் உடனடி பணப்புழக்க தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிச்செல் தெரிவித்துள்ளார்.  Source link

ரஷ்யாவிடம் இருந்து 34 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது இந்தியா.!

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட 3 மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் 34 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மூன்றே மாதங்களில் இந்தியா பெற்றுள்ளது. ஏப்ரலில் 7.2 மில்லியன் பீப்பாய் அளவிலான கச்சா எண்ணெய் பெற்ற நிலையில், இந்த மாதம் 24 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் கச்சா … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர தமிழகஅரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டு உள்ளதாகவும், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், டிஜிபியின் ரம்மி குறித்த அறிவிப்பு மற்றும் ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

காளையார்கோவில் அருகே ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர். மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். … Read more

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே … Read more

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவு- ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

பிரசல்ஸ்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 97-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷியாவை நம்பியே உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தேவையான 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருட்களை … Read more

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க செப். 15 கடைசி நாள்: ஒன்றிய அரசு

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க, பரிந்துரைக்க செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் பத்ம விருதுகள் 2023க்கான பரிந்துரைகள் வரவேற்பு; ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

டெல்லி: 2023ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த … Read more