நெல்லை: முறைகேடாக கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்தியதாக 5 லாரிகள் பறிமுதல்

கேரளாவுக்கு முறைகேடாக கனிமவளங்களை கடத்திய 5 லாரிகளை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் பறிமுதல் செய்தார். நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளில் பாறை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 6 குழுவினர் அந்த குவாரிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று வரை இந்த குவாரிகளுக்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்ல … Read more

ஆறு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்

மும்பை, மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர்.ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட … Read more

பார்முலா1 கார் பந்தயம்: மெக்சிகோ வீரர் முதலிடம்

மான்டேகார்லோ, இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 7-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள மான்டேகார்லோ ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பலத்த மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் 260.286 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 1 மணி 56 நிமிடம் 30.265 … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி – விசாரணைக்கு அழைப்பு

Live Updates 31 May 2022 3:35 AM GMT ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு 31 May 2022 12:35 AM GMT ரஷியா மீதான எண்ணெய் தடைக்கு ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான சார்லஸ் மைக்கேல், உக்ரேனில் போருக்கான ரஷியாவின் நிதியுதவியை குறைக்கும் முயற்சியில், ரஷியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரும் எண்ணெய் இறக்குமதியில் 2/3ஐ தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவித்தார். … Read more

தங்கம் விலை சரிவா.. சென்னையில் என்ன நிலவரம்?

தங்கம் (gold) விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றாலும், அமெரிக்காவில் விடுமுறை நாட்கள் என்பதால் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. இது தங்கத்திலும் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது தொடர்ந்து, 1850 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் … Read more

சென்னை விஐடி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், மேலும் 42 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல், கொரோனா கிளஸ்டரைப் புகாரளிக்கும் நான்காவது கல்வி நிறுவனம் இதுவாகும். இந்த புதிய எழுச்சி மூலம், சென்னையை (33) விஞ்சும் வகையில், செங்கல்பட்டு (46) புதிய பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை … Read more

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழப்பு.!

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவர் நேற்று வெளியூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது, பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாதுவின் மீது இருசக்கர வாகனம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் பின்னால் வந்த அரசு பேருந்து மாதுவின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் மாது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை … Read more

விவாகரத்துக்குப்பின் மீண்டும் இணைந்த தம்பதி; சோகத்தில் முடிந்த பயணம் – நேபாள விமான விபத்தில் துயரம்

அசோக் திரிபாதி (54) ஒடிசா-வில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். பைரவி (51) மும்பை பி.கே.சி வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தனுஷ்(22) ரித்திகா (15) என இரண்டு பிள்ளைகள். அஷோக் – பைரவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதனால் பிள்ளைகளுடன் பைரவி மும்பையில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுக்காக சுற்றுலா செல்ல பேசி முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சுற்றுலா நகரமான … Read more

தனியார் பேருந்துன்னா வானத்திலயா ஓட்டிட்டு போறீங்க.. இறக்கி விட்டா என்னப்பா? அடாவடி ஓட்டுனரின் ஆவேச வீடியோ..!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் 25 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்ற பயணி ஒருவர் தங்கள் கிராமத்தில் பேருந்தை நிறுத்தச்சொல்ல நடத்துனரோ, அரசுப் பேருந்தில் ஏறவேண்டியது தானே என்று மரியாதைக்குறைவாக பேசி பயணியிடம் அடாவடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வந்து, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் முருகவிலாஸ் பேருந்தில் பணிபுரியும் ஊழியரின் மிரட்டல் வீடியோ ஒன்று மண்டை ஓட்டு முத்திரையுடன் இணையத்தை கலக்கி வந்தது. இந்த … Read more

அமைச்சர் பொறுப்பு | தலைமைக்கு தர்மசங்கடம் தர வேண்டாம்: உதயநிதி வேண்டுகோள்

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு … Read more