NEET UG 2022: இலவச மாக் டெஸ்ட்; முந்தைய ஆண்டு வினாத் தாள் பெறுவது எப்படி?

NEET 2022 free mock test and previous year papers download here: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பெறுவது எப்படி? மாதிரி தேர்வுகளை இலவசமாக பயிற்சி செய்வது எப்படி? என்பது குறித்து இப்போது பார்ப்போம். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்தி … Read more

திருவாரூர் மாவட்டம்.! குளிக்க சென்ற 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி.!

திருவாரூர் மாவட்டத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரைக்கோட்டை, தண்ணீர்பந்தல் தெருவை சேர்ந்த டேனியல் (வயது 15) மற்றும் அதே பகுதியில் நடேசன் காலனியை சேர்ந்த மகேந்திரன் (வயது 15) இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து செருமங்கலத்தில் உள்ள சக்குரியான் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது நீச்சல் தெரியாததால் டேனியல் மற்றும் மகேந்திரன் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த நண்பர்கள் கரைக்கு சென்று உதவி … Read more

Singer KK: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகர் கே.கே-வின் டாப் 15 பாடல்கள்! | #RIPKK | Visual Story

பிரபல பாடகர் KK மாரடைப்பால் காலமானார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த KK-வுக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். KK என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்தின் வயது 53. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார் கே.கே. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள் இதோ… ஏ.ஆர்.ரஹ்மான் … Read more

குரங்கம்மை பரவல்: வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு.!

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து சென்னை, கோவை உட்பட சர்வதேச விமான நிலையங்கள் வருபவர்களை கண்காணிக்க தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வரும் நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு உடல்வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு … Read more

“தமிழக அரசு 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால்…” – அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: “தமிழக அரசு இன்னும் 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர். எழும்பூர் ருக்மணி லட்சுமபதி சாலையில் … Read more

பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்; தனித்துவ குரலால் தமிழிலும் வசீகரித்தவர்

கொல்கத்தா: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 53. பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார். கடந்த 1968-இல் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் … Read more

விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தில், தமிழகத்தில் 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்- மத்திய இணை மந்திரி தகவல்

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ளது என்றார்.  சென்னை காசிமேடு உட்பட நாடு முழுவதும் ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு … Read more

பிரதமரின் காப்பீட்டு திட்டங்களில் பிரீமியம் உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த 2015 ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி  பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 12 லிருந்து ரூ. 30 ஆகவும் மாற்றியமைக்கப்படுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளாக … Read more

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் திடீரென களத்தில் குதித்த பிரபல ஊடக உரிமையாளர்: காங்கிரசுக்கு சிக்கல்

புதுடெல்லி:  ராஜஸ்தானில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக எஸ்செல் குழுமத்தின் தலைவரும், ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவருமான சுபாஷ் சந்திரா வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜ ஆதரவோடு அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதன் காரணமாக, ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கேள்வி குறியாகி உள்ளது. பிரமோத் திவாரியை எதிர்த்து சுபாஷ் சந்திரா களமிறங்கி உள்ளார்.

நெல்லை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: திமுக பிரமுகரின் தம்பி படுகாயம்

வீட்டில் கள்ளத்தனமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்ததில் திமுக பிரமுகரின் தம்பி படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவர் திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகவும் 1வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது தம்பி் இசக்கிமுத்து என்பவர் இன்று வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் இசக்கிமுத்துவிற்கு பலத்த காயம் … Read more