தொடர் கல்வி படிக்க வசதி இன்றி இடமலைகுடி மாணவர்கள் தவிப்பு| Dinamalar
மூணாறு : கேரள மாநிலம் மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி இல்லாததால் 19 மலை வாழ் பள்ளி மாணவர்கள் தொடர் கல்வி பெற இயலாத அவலம் நீடிக்கிறது.இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 28 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 2010ல் இம்மக்களுக்கு என தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டது. அங்கு சொசைட்டிகுடியில் 1978ல் துவங்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி மட்டும் உள்ளது. நடுநிலைப்பள்ளி உட்பட வேறு பள்ளிகள் இல்லாததால் தொடர் கல்வி பெற இயலாமல் மாணவர்கள் உள்ளனர். … Read more