ஆயிஷா படுகொலை வழக்கு – சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (ஜூன் 1ம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘கொத்து பாஸ்’ என்ற சந்தேக நபர் இன்று (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க இந்த உத்தரவை … Read more

உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரைப் பெற்றார் 103 வயதான ரூத் லார்சன்..

சுவீடன் நாட்டை சேர்ந்த 103 வயதான ரூத் லார்சன் என்ற பெண் உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றுள்ளார். தனக்கு 90 வயதாகும் போது பாரா கிளைடிங், கிளைடிங், பாராசூட்டில் பறப்பது உள்ளிட்டவற்றை அதிகம் கற்க விரும்பியுள்ளார் ரூத் லார்சன். பின்னர் தொடர்ந்து ஸ்கை டைவிங் பயிற்சி மேற்கொண்டு வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மொடாலா பகுதியில் ஸ்கை டைவிங் செய்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றார். … Read more

தமிழில் சிறந்த பல பாடல்களை பாடிய பிரபல பாடகர் கே.கே அதிர்ச்சி மரணம்

தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பல நூறு பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் கே.கே மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்தவர், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திடீரென்று சுருண்டு விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்ற நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பு உறுதி செய்துள்ளது. 53 வயதான பாடகர் கே.கே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். கேரளத்து … Read more

பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு

டெல்லி: சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம்  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்து கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக உள்ளது.  2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த … Read more

பஞ்சாப்பில் பலத்த பாதுகாப்புடன் மூஸ்சேவாலா உடல் தகனம்

சண்டிகர்: சண்டிகரில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்சேவாலாவின் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் பாப் பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்சேவாலா(28) சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். மூஸ்சேவாலா உட்பட மொத்தம் 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு கடந்த சனியன்று விலக்கி கொண்டது. இந்நிலையில், அடுத்த நாளே மூஸ்சேவாலா மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் … Read more

மதுரை: 2 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சியில் 2 நாட்களாக நடைபெற்று வந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் அடிப்படையில் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், 2006ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியில் … Read more

காங்.,கில் இருந்து விலகிய ஹர்திக் பா.ஜ.,வில் நாளை இணைகிறார்| Dinamalar

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியதால் பிரபலமாகி, சமீபத்தில் காங்.,கில் இருந்து விலகிய ஹர்திக் படேல் நாளை பா.ஜ.,வில் இணைகிறார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015ல் பதிதார் எனப்படும் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தினார். இதில் வெடித்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட, 10 … Read more

ஸ்கை டைவிங்கில் அசத்திய துஷாரா

‛போதையேறி புத்திமாறி, சார்பட்டா பரம்பரை' படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை துஷாரா விஜயன். தற்போது அன்புள்ள கில்லி, அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் துஷாரா சுற்றுலாவுக்காக துபாய் சென்றார். அங்கு விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் செய்து அசத்தி உள்ளார். இதுபற்றி துஷாரா கூறுகையில், , ‛‛வானில் இருந்து பூமியை பார்ப்பது சொர்க்கத்தை பார்த்த உணர்வை தந்தது. உடல், ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி கிடைத்தது. என்னுடைய பயிற்சியாளருக்கு நன்றி'' என்றார்.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு தடை| Dinamalar

பிரசல்ஸ் : உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பது என, ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மூன்று மாதங்களை தாண்டியுள்ளது.இப்போரை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அடுத்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டமிட்டது.ஆனால், ஐரோப்பிய நாடுகள் … Read more

டிசிஎஸ் முக்கிய அறிவிப்பு: 8% ஊழியர்களுக்கு மட்டும் ஆபீஸ்.. சம்பளம் உயர்வு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களுக்கான இரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் டிசிஎஸ் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் சக போட்டி ஐடி நிறுவனங்களும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே ஐடி நிறுவனங்களின் சிஇஓ மற்றும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ள ஐடி ஊழியர்கள், கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வுக்குக் காத்திருக்கின்றனர். ஐடி ஊழியர்களே முழிச்சிக்கோங்க.. 10 வருடத்தில் … Read more