ஸ்டாலின் கான்வாயில் செய்தியாளரை தள்ளிவிட்ட பாதுகாப்பு போலீஸ்: வேறு பணிக்கு மாற்றி உத்தரவு

எஸ்.இர்ஷாத் அஹமது – தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின்போது வீடியோ எடுத்த வேந்தர் தொலைக்காட்சி சேனலின் செய்தியாளரை முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நெட்டித் தள்ளி தாக்கியதில் அச்செய்தியாளர் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, செய்தியாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட … Read more

குரங்கு அம்மை பாதிப்பு : விமான நிலையங்களில் அதிரடி சோதனை.!

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவி வருகிறது. காய்ச்சல், கொப்புளம் மற்றும் கணுக்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய … Read more

திண்டுக்கல்: ஃபேஸ்புக்கில் பாஜக ஆதரவு, திமுக எதிர்ப்பு பதிவுகளை பகிர்ந்த காவலர் சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக மேட்டுபட்டியைச் சேர்ந்த சுரேஷ் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பா.ஜ.க ஆதரவு செய்திகளையும், தி.மு.க அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் பகிர்ந்துவந்திருக்கிறார். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள நண்பர்களாக உள்ள சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி உள்ளிட்டோர் தி.மு.க அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க ஆதரவு செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்தால் அதை இவருடைய பக்கத்தில் ஷேர் செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். … Read more

காற்றாலை, சூரியசக்தி மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு – செந்தில் பாலாஜி

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். Source link

கப்பற்படை அதிகாரி ஆன நீலகிரியைச் சேர்ந்த படுகர் சமூகப் பெண்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகே உள்ள கேத்தி கிராமத்திலுள்ள படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மீரா என்பவர் கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (23). ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக இருந்த ரவீந்திரநாத், வெலிங்டன் மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக பணி மாறுதலாகி செல்லும் … Read more

தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 100 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ரோபோ தயாரிப்பு!

ஜப்பானில் அதிக பாரங்களை ஏற்றும் வகையில் ஆடு வடிவிலான ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த Kawasaki நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது. கரடு முரடான இடங்களில் நான்கு கால்களைக் கொண்டும், மென்மையான தரைகளில் அதில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களைக் கொண்டும் நகரும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.  100 கிலோ வரை பாரம் ஏற்றும் வகையில் உருகாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, அடுத்த ஆண்டு முதல் வணிக பயன்பாட்டுக்கு வரும் என … Read more

கர்ப்பிணிப்பெண்ணை சரமாரியாக சுட்ட பொலிசார்: அமெரிக்காவில் ஒரு பதறவைக்கும் சம்பவம்

அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில், கார் ஒன்றை ஆயுதங்களுடன் சிலர் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் கார் ஒன்றைத் துரத்திச் சென்றுள்ளார்கள். ஒரு கட்டத்தில் அந்தக் கார் நிற்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய சாரதி ஓட்டம் பிடித்துள்ளார். அதே நேரத்தில், மற்றொரு பெண் காரிலிருந்து இறங்கியுள்ளார். … Read more

திருப்பதி போல் திருச்செந்தூர் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்! அமைச்சர் சேகர்பாபு…

திருச்செந்தூர்: திருப்பதி போல் திருச்செந்தூர் கோவிலின் உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “திருச்செந்தூருக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலின் உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றார். திருச்செந்தூரில், ஒரே நேரத்தில் 5000 … Read more

மின் வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி புகார்

கரூர்: கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில்,  மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-  தமிழகம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.  குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. மின் வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான … Read more