தவறு யார் செய்தாலும் தவறு தான்: தாம்பரம் காவல் ஆணையர் ரவி

சென்னை: தவறு யார் செய்தாலும் தவறு தான் என பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார். மக்களின் பணிதான் முக்கியம், மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை, மக்கள் தான் நமக்கு எஜமானர்கள். சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு சக்கரம், ஓய்வு பெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.

கோடை விடுமுறைக்குப் பிறகு கேரளாவில் நாளை பள்ளிகள் திறப்பு; ஓடாத பஸ்கள் வகுப்பறையாக மாற்றம்.!

திருவனந்தபுரம்: கோடை விடுமுறைக்கு பிறகு கேரளாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கேரளாவில் பள்ளிகள் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. வழக்கமாக எல்லா வருடங்களிலும் ஜூன் 1ம் தேதி முதல் தான் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக மிகவும் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு வழக்கம் போல ஜூன் 1ம் தேதி (நாளை) பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. … Read more

கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளைஞர் – மதுபோதையில் நடந்த அதிர்ச்சி

திருவள்ளூரில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் மது அருந்தியபோது நடந்த சம்பவத்தில், 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், தமது பிறந்த நாளில் நண்பர்களுக்கு, இளைஞர் மாரிமுத்து மது விருந்து வைத்துள்ளார். அலமாதி ஏரியில் மாரிமுத்து, … Read more

அஸ்திரா எவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் | Dinamalar

புதுடில்லி : விமானப்படை மற்றும் கடற்படைக்கு, ௩,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பில் ‘அஸ்திரா’ ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. விண்ணில் பறந்து சென்று, எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடை மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, அஸ்திரா ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ளது. ஒலியைக் காட்டிலும் வேகமாகச் செல்லக்கூடிய, அஸ்திரா ஏவுகணை 3.8 மீட்டர் நீளம் உடையது. இதன் எடை, … Read more

வெங்கடேஷ் – ராணா நடித்துள்ள வெப்சீரிஸ் நிறைவு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் ராணா இருவரும் இணைந்து தற்போது நடித்துள்ள புதிய வெப் சீரியஸுக்கு 'ராணா நாயுடு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அன்ஷுமான் மற்றும் சுப்ரான் எஸ்.வர்மா இயக்குகிறார்கள். சுஷாந்த் சிங், உர்வீன் சாவ்லா, அபிஷேக் பானர்ஜி, சுசித்ரா பிள்ளை, கௌரவ் சோப்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி ,ராஜேஷ் ஜெய்ஸ் போன்ற நடிகர்கள் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். … Read more

விமான விபத்தில் உயிரிழந்த கடைசி நபரின் உடல் மீட்பு| Dinamalar

காத்மாண்டு : நேபாள விமான விபத்தில் உயிர் இழந்த, 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், இரு தினங்களுக்கு முன், பொகாரா நகரில் இருந்து ஜாம்சம் நோக்கிச் சென்ற விமானம், மஸ்டாங் மாவட்டம் அருகே, மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த நான்கு இந்தியர்கள் உட்பட, 22 பேரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம், உயிரிழந்த நிலையில், 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. வானிலை … Read more

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புச் சரிவு.. மறுபடியுமா..!!

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து 77.67 ஆக உள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்வடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 90 சதவீத குறைக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்த காரணத்தால் WTI கச்சா எண்ணெய் 119.1 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 123.5 டாலராகவும் உயர்ந்துள்ளது. … Read more

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்தத எச்சரிக்கை

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக … Read more

தேர்தல் நிதியாக ரூ.477 கோடியை பெற்ற பாஜக, காங்கிரஸ் ரூ.74.5 கோடி; ஆணையம் தகவல்

BJP received Rs 477 crore worth of contributions in FY 21, Congress Rs 74.5 crore: ECI: 2020-21 நிதியாண்டில் ரூ.20,000க்கு மேல் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி பாஜக ரூ.477.54 கோடி மதிப்பிலான நன்கொடைகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் ரூ.74.5 கோடியைப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை பொது தளத்தில் வெளியிட்ட இரு கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் … Read more

#தமிழகம் || பாஜகவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து தெரிவித்த காவலர் பணியிடை நீக்கம்.!

திண்டுக்கல் அருகே அரசியல் கட்சி சார்பாக கருத்துக்களை முகநூலில் பதிவிட்டு வந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், அம்பத்தூரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் நபர் நடுநிலையோடு இயங்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளின் அடிப்படையில், காவலர் சுரேஷை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு … Read more