காங்கோ : ஆப்ரிக்க நாடான காங்கோவில் குரங்கு அம்மை பரவியுள்ளது. நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.இந்நோய்க்கு நைஜீரியாவின் காங்கோவில் 9 பேர் பலியாகியுள்ளனர். காங்கோ சுகாதார பிரிவு தலைவர் அய்மி அலங்கோ கூறும்போது, 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இந்நிலையில் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், குரங்கு அம்மை சோதனையை மேற்கொள்ளுமாறும் மாநில சுகாதாரத்துறைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement