முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறுவதனால் முக அழகையே மாற்றிவிடுகிறது.
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் உபயோகப்படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது.
எவ்வித பாதிப்புமின்றி ஒரு சில எளியவழிகள் மூலம் இதனை போக்க முடியும் . தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- தேன் – 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – சில துளிகள், எலுமிச்சை சாறு -சில துளிகள்,
பால் பவுடர் – அரை டீஸ்பூன்,
பாதாம் பேஸ்ட் – அரை டீஸ்பூன்அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளவும். இதை முகம் முழுக்க தடவி விடவும். இது சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றும். தேனில் சில என்சைம்கள் நிறைந்துள்ளன. இது சருமத்துக்கு பளபளப்பை சேர்க்கின்றன.
- கற்றாழை மடலை வெளியேற்றி உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். இதை நன்றாக கலந்து தேவையெனில் பன்னீர் சேர்த்து கலந்து முகத்துக்கு பயன்படுத்தவும். இது கரும்புள்ளிகளுக்கு எதிரான இயற்கையான தீர்வாகும் புதிய கற்றாழை ஜெல்லை கருவளையங்கள் இருக்கும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் தடவி சிறிது நேரம் விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.
- நீர்த்த எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து முகத்தில் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வரலாம். இது சருமத்தை உறிஞ்சும். மேலும் எலுமிச்சை பயன்படுத்திய பிறகு வெயிலில் செல்ல கூடாது என்பதால் மாலை நேரத்தில் செய்யுங்கள். தேவையெனில் இதனுடன் தக்காளி சாறு மற்றும் சிட்டிகை மஞ்சள் கலந்து பயன்படுத்தலாம்.
- அவகேடோ பழம் ஒலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த பொருள்கள் அவகேடோவை தோல் நிறமிக்கு எதிராக மாற்றுகிறது. இது சருமத்தின் ஆழமான ஊட்டத்துக்கு மிகவும் நல்லதும் கூட. அவகேடோ பழத்தை மசித்து, மென்மையாக கட்டிகள் இல்லாமல் சருமத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சருமத்தை மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு பாருங்கள் முகம் கருந்திட்டுக்கள் இல்லாமல் பளிச்சிடும்.
- தயிருடன் ஓட்ஸ் பொடித்து நன்றாக கலந்து முகத்தில் பயன்படுத்தவும்.இதில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது இயற்கை முகவர் என்று சொல்லலாம். சருமத்தின் கருந்திட்டுக்களை இயற்கயாகவே வெளியேற்ற அற்புதமாக செயல்படும். தேவையெனில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.