டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் தீவிரவாதிகள் கொன்று வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி 8ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தைஎ தீவிரம் காட்டியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 5 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நேற்று கூட ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பண்டித்கள் 18 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது 8 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதிலேயே மும்முரம் காட்டுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்துக்கொண்டிருப்பது திரைப்பட காட்சி எனவும், காஷ்மீரில் இன்றுள்ள எதார்த்தத்தையே தான் குறிப்பிடுவதாகவும் ராகுல் காந்தி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.