புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 338-ஐ விட அதிகமாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 236 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 193 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரத்து 807 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.