இப்படி கூட நடக்கலாமோ.. ஓபெக் நாடுகளின் திட்டம் முடிவு எப்படியிருக்கும்.. என்ன செய்ய போகிறது ரஷ்யா?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இன்றளவிலும் தொடர்ந்து வருகின்றது. இது என்று முடியுமோ என்ற மிகப்பெரிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகள் என பலவும், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.

இதற்கிடையில் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 121 டாலர்களையும் தாண்டியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் பங்களிப்பை நிறுவதற்கான யோசனைகளை ஓபெக் உறுப்பினர்கள் சிலர் ஆலோசனை கூறுவதாக ஓபெக் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

WFH முடிந்ததால் அகர்பத்தி விற்பனை வீழ்ச்சி.. ஏன் தெரியுமா..?!

ரஷ்யாவை விலக்க திட்டமா?

ரஷ்யாவை விலக்க திட்டமா?

ரஷ்யாவை அதன் எண்ணெய் உற்பத்தி இலக்குகளில் இருந்து விலக்குவது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மற்ற உற்பத்தி நாடுகளின் அமைப்பில் உள்ள பிற உற்பத்தியாளர்கள் கணிசமாக, அதிக கச்சா எண்ணெய் சப்ளை செய்ய வழிவகுக்கும். இது ரஷ்யாவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்பது பெரிய கேள்வியாக இருந்தாலும், மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் கச்சா எண்ணெய்

உச்சத்தில் கச்சா எண்ணெய்

ஏற்கனவே உக்ரைன் மீது படையெடுத்த பிறகு 100 டாலர்களை தாண்டிய ஆயில், ஐரோப்பிய நாடுகளின் தடை அறிவிப்புக்கு பிறகு 121 டாலர்களை தாண்டியது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யா, கடந்த ஆண்டு ஒபெக் மற்றும் ஒபெக் அல்லாத நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியினை அதிகரிக்க ஒப்புக் கொண்டது. ஆனால் நடப்பு ஆண்டில் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 8% குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியினை அதிகரிக்கலாம்
 

உற்பத்தியினை அதிகரிக்கலாம்

எனினும் இதற்கு ரஷ்யா எந்த மாதிரியான பதிலை கொடுக்கும் என்பது குறித்து எந்த கணிப்பும் இல்லை. இதுவரையில் ரஷ்ய பற்றாக்குறையை ஈடுசெய்ய ஓபெக் நாடுகளுக்கு அதிக எண்ணெய் சப்ளை செய்ய எந்தவிதமான உந்துதலும் இல்லை. ஆனால் அடுத்த சில மாதங்களில் சில நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபெக் உறுப்பினர்கள் சந்திப்பு

ஓபெக் உறுப்பினர்கள் சந்திப்பு

வரவிருக்கும் வியாழக்கிழமையன்று ஒபெக்கின் 13 உறுப்பினர்களும், ஒபெக் அல்லாத 10 உற்பத்தியாளர்களும் வியாழனன்று சந்திக்க உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு 4,32,000 பேரல்களை உற்பத்திக்கு ஒப்புதல் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியினை எழுப்பியுள்ளன.

ரஷ்யாவுக்கு பாதிப்பா?

ரஷ்யாவுக்கு பாதிப்பா?

தற்போது உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த காலக்கட்டத்தில் உற்பத்தியினை அதிகரிக்க கூறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ரஷ்யா தற்போது வரையில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் ரஷ்யா உறுப்பினராக இல்லாவிட்டாலும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாக இருக்கலாம். ஆக இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is there a plan to remove Russia from the OPEC list?

Excluding Russia from its oil production targets could lead to a significant increase in crude oil supplies by other producers in the OPEC countries, including Saudi Arabia and the United Arab Emirates.

Story first published: Wednesday, June 1, 2022, 20:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.