புதுடில்லி : நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை ஒட்டி, இமயமலை சிகரத்தின் உச்சியில் ஏறி நம் விமானப்படை வீரர் தேசிய கீதம் இசைத்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள மத்திய விமானப்படையில் ‘விங் கமாண்டர்’ பொறுப்பு வகிப்பவர் விக்ராந்த் உனியால். மலை ஏற்றத்தில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு செய்தார்.
தன்னுடைய மலை ஏற்ற நண்பர்களுடன் சேர்ந்து நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஏப்ரல் 15ல் இமயமலையில் ஏற துவங்கினார். மே 21ல் இமயமலையின் உச்சியை அடைந்தார். அங்கு தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தபடி தேசிய கீதத்தை உரக்கப் பாடினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மக்கள் மத்தியில் பிரபலமாகாத அமைப்புகள் மற்றும் தலைவர்களுக்கு இந்த மலை ஏற்றத்தை சமர்ப்பிப்பதாக வீரர் விக்ராந்த் தெரிவித்தார்.
புதுடில்லி : நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை ஒட்டி, இமயமலை சிகரத்தின் உச்சியில் ஏறி நம் விமானப்படை வீரர் தேசிய கீதம் இசைத்தார்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.