இஸ்ரேல்-ன் வரலாற்று ஒப்பந்தம்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் கூட்டணி..!

கொரோனா-வுக்குப் பின்பு ஐக்கிய அரபு நாடுகள் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை விரிவாக்கம் செய்யப் பல நாடுகள் உடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்பத்தில் துவங்கி பல துறையில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது,

இஸ்ரேல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது இஸ்ரேல் நாடு அரபு நாட்டுடன் முதல் முறையாகச் செய்யும் ஒப்பந்தம் என்பதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ‘Unemployment Insurance” பற்றி தெரியுமா உங்களுக்கு?

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

துபாயில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டு உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இஸ்ரேல் தூதர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ப்ரீ டிரேட் ஒப்பந்தம்

ப்ரீ டிரேட் ஒப்பந்தம்

பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இஸ்ரேல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஓர்னா பார்பிவா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வரலாற்று ஒப்பந்தம்
 

வரலாற்று ஒப்பந்தம்

vஇது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தமாக விளங்குவதற்கு முக்கியக் காரணம் ஒரு அரபு நாடு உடன் இஸ்ரேல் முதல் முறையாக வர்த்தக ஒப்பந்தம் செய்வது தான். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுங்க வரி

சுங்க வரி

இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்புக்கும் இடையே வர்த்தகப் பொருட்களில் சுமார் 96% ப்ராடெக்ட் மீதான சுங்க வரிகளை ரத்து செய்யப்பட உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அரசின் தரவுகள் படி கடந்த ஆண்டு இருவழி வர்த்தகம் சுமார் 900 மில்லியன் டாலராகும்.

இந்தியா

இந்தியா

எண்ணெய் வளம் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிப்ரவரி மாதம் இந்தியாவுடன் இதே போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

10 பில்லியன் டாலர்

10 பில்லியன் டாலர்

எமிரேட்ஸ் வர்த்தகத் துறை அமைச்சர் தானி அல் சியோடி கூறுகையில் இந்த ப்ரீ டிரேட் ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான எண்ணெய் அல்லாத இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 10 பில்லியன் டாலரை தாண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Israel – UAE sign free trade deal; First ever FTA with Arab country

Israel – UAE sign free trade deal; First ever FTA with Arab country இஸ்ரேல்-ன் வரலாற்று ஒப்பந்தம்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் கூட்டணி..!

Story first published: Wednesday, June 1, 2022, 21:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.