இந்திய பங்கு சந்தைக்குள் சமீபத்தில் காலடி வைத்த எல்ஐசி நிறுவனம், அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில், இந்தியாவில் 6வது பெரிய நிறுவனமாக இருந்தது.
ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டுள்ள நிலையில், 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எல்ஐசி-யை அடுத்து ஹவுஸிங் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 8வது இடத்தினை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கியானது 9வது இடத்தில் உள்ளது.
புகை பிடிப்பவர்களால் இந்தியாவுக்கு 766 மில்லியன் டாலர் செலவு: WHO தகவல்
எல் ஐ சி நிலவரம்?
பிஎஸ்இ தரவின் படி, செவ்வாய்க்கிழமையன்று முடிவின் படி எல்ஐசி-யின் சந்தை மூலதனம் 5,13273.56 கோடி ரூபாயாகும். இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 5,22,519.50 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே ஹெச் டி எஃப் சியின் சந்தை மூலதனம் 4,18,509.55 கோடி ரூபாயாகவும் இருந்தது. எஸ்பிஐ சந்தை மூலதனம் 9வது இடத்தில் 4,17,493.33 கோடி ரூபாயாகவும் உள்ளது.
முதலிடம் எது?
இதே 10வது இடத்தில் பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு 3,85,046.03 கோடி ரூபாயாக இருந்தது.
இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 17,81,838.68 கோடி ரூபாயாகவும் உள்ளது. இது டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2ம் இடம்
இரண்டாவது இடத்தில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 12,31,197.61 கோடி ரூபாயாக இருந்தது. இதனையடுத்து ஹெச் டி எஃப் சி வங்கி அதிக சந்தை மதிப்பினை கொண்ட வங்கியாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு 7,70,210.88 கோடி ரூபாயாக உள்ளது. இது 3வது இடத்தில் உள்ளது.
டாப் 10ல் இருந்து விலகல்
கோடக் மகேந்திரா வங்கி வங்கி இந்த டாப் 10 பட்டியலில் இருந்து விலகி 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 3,68,085.97 கோடி ரூபாயாகும்.
தற்போதைய பங்கு நிலவரம்?
LIC-யின் பங்கு விலையானது தற்போது என்.எஸ்.இ-யில் சற்று அதிகரித்து, 812.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 817.45 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 811 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 811.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 817 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 811.25 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 801.25 ரூபாயாகவும் உள்ளது.
LIC market capitalization dips below ICICI bank to 7th place: What is the stock situation today?
LIC was previously the 6th largest company in India in terms of market value. But now the market value has plummeted to 7th place.