எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்


இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

இலங்கைஇராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு ஆயிரத்து 108 பேர் கடமையாற்றுகின்றனர்.

கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனத்தையே பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தின் வாடகைப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

200 லீட்டருக்கும் ​மேல் அவர்களுக்கு இலவசமாக எரிபொருள் 

அத்துடன் மாதமொன்றுக்கு 200 லீட்டருக்கும் ​மேல் அவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படுகின்றது.

வாகனத்துக்கு சாரதியொருவரும், உதவியாளர் ஒருவரும் வழங்கப்படுகின்றது.

ஆனால் அனைத்து இராணுவ அதிகாரிகளும் இவ்வாறு கிடைக்கும் வாகனங்களை தங்கள் மனைவிமாரின் சொப்பிங் மற்றும் பிள்ளைகளின் பாடசாலைப் பயணங்களுக்கே பயன்படுத்துகின்றனர்.

அந்தந்த அதிகாரிகளின் தேவைகளுக்கு இராணுவத்தின் ரெஜிமண்ட் அல்லது முகாம்களின் வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் காரணமாக வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் அளவிலான எரிபொருள் இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களால் வீண் விரயம் செய்யப்படுகின்றது.

1330 மில்லியன் வருடாந்தம் இராணுவ நிதி

■ அந்த வாகனங்களுக்கான வாடகைக் கொடுப்பனவாக 1330 மில்லியன் வருடாந்தம் இராணுவ நிதியில் செலவிடப்படுகின்றது

■ அதற்கு மேலதிகமாக முகாம் அல்லது ரெஜிமண்ட் வாகனங்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் மேற்கொள்ளும் பயணங்களிலும் அதே அளவு எரிபொருள் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

விமானப்படை மற்றும் கடற்படை என்பவற்றிலும் இவ்வாறான வீண்விரயம் நடைபெறுகின்ற போதிலும் ஒப்பீட்டளவில் இராணுவத்தை விடவும் குறைந்தளவான எரிபொருளையே அவர்கள் விரயம் செய்கின்றனர்.

ஒட்டுமொத்த நாடும் எரிபொருள் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டு, அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வரை மூடப்படும் நிலையை எதிர்கொண்டிருக்க இராணுவத் தரப்போ பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் இராணுவ நிதியில் பெருமளவு பணத்தை இராணுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக வீண் விரயம் செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.