3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
இதேவேளை, இன்றும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கூட 50,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள், எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வரும்போது, விற்பனை முகவர் நிலையங்களில் சிலிண்டர்கள் இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொண்டு வருமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இன்றும் எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 பவுசர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.